எழுத்தாளர் சுஜாதாவை ஒரு அறிவியல் எழுத்தாளராக மட்டுமே சிறுவயதில் அறிந்திருந்த எனக்கு அவரது ''ஸ்ரீரங்கத்து தேவதைகள்'' ஒரு புதிய பிம்பத்தை தந்தது. சுவாரசியமான எழுத்தில் நகைச்சுவை இழையாட ஸ்ரீரங்கத்தை மிக நேர்த்தியாக படம் பிடித்து காட்டியிருந்தார். அவர் மூலமாகவே பிரபந்தத்தின் சுவையை அறிந்தேன். ஆண்டாளை காதலித்தது அவர் வழியாகவே. அவரை 31-12-2000 ஆண்டு மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகே நானும் எனது நண்பர் வெங்கடேசனும் சந்தித்தோம். ஒரு 40 நிமிடம் உரையாடினோம். இடையிடையே ஆங்கிலத்தில் பேசிய எனது நண்பரை தமிழிலேயே பேசலாமே என்று அன்புடன் கடிந்து கொண்டார். நவீன இலக்கியத்தில் எனக்கிருந்த ஈடுபாட்டை வெகுவாக பாராட்டினார். பின் நவீனத்துவத்தை அதன் அடிப்படையோடு போதித்தார். வாசிப்பை பரவலாக்கம் செய்வதன் அவசியத்தை உணர்த்தினார். ''ஒரு நாளில் நீங்களும் எழுத்தாளராக பரிணாமம் பெறுவதற்கு சாத்தியம் நிறைய இருக்கிறது'' என்றார். அவரும் வெண்பா எழுதுவார். நானும் எழுதுவேன். அங்கேயே இரண்டு வெண்பாக்கள் நான் சொல்ல, அதை அவர் திருத்தினார். பசுமையான அந்த நினைவுகளின் ஊடே சிந்தித்து பார்க்கையில் நானும் இப்போது மூன்று கதைகள் எழுதி அவருடைய ஆரூடத்தை மெய்ப்பித்து விட்டேன். ஆனால் வாசிக்கத்தான் என் ஆதர்சனமான சுஜாதா என்னும் மிகப்பெரும் ஆளுமை இல்லை.
Monday, February 27, 2017
சுஜாதா நினைவாக... (சுஜாதா நினைவு நாள்: பிப்ருவரி 27)

Tuesday, February 14, 2017
பொருள் சுமந்த சொற்கள்: சிறுகதை
பொருள் சுமந்த சொற்கள்: (1)
பெரிய கம்பி கிராதி போட்ட தடுப்பு காவல் அரணருகே நின்ற அந்த காவலர் தன்னை மீறி நுழைய முயன்ற ஆட்டோவை நிறுத்தி ''யாரை பாக்கணும்'' என்று ஆட்டோக்காரரை வினவினார். ஆட்டோ உள்ளிருந்த வைத்தியநாத ஐயர் ''கலெக்டர் வீட்ல கணபதி ஹோமம் பண்ணனும்னு சொன்னாங்க...பூஜை சாமான் லிஸ்ட் கொடுக்கலாம்னு வந்தேன்...வேறொன்னுமில்ல...''
''அப்பிடியா...போங்க....'' ஆட்டோக்காரரிடம் ''நேரா போயி இரண்டாவது ரைட்டு திரும்புங்க...முதல் ரைட்ல இருக்குறது கேம்ப் ஆபிஸ்...பின்னாடி தான் பங்களா இருக்கு...மெதுவா போங்க...உங்க போன் நம்பர் சொல்லுங்க சாமி...ரெஜிஸ்டர்ல எழுதணும்''
''நான் போன் வச்சிக்கிறது இல்லங்க...வீட்டு விலாசம் தரட்டுங்களா?''
''இந்த காலத்தில போன் இல்லாம எப்படி..ம்ம்..சரி...கொடுங்க'' காவலர் பதிவேட்டில் எழுதிக் கொண்டார்.
''ஏன்னா...இப்படியா பொய் சொல்வேள்...அந்த நம்பரை கொடுத்தற வேண்டியது தானே...'' என்றாள் கோதை மாமி.
''ஒன்ன வச்சிண்டு எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலடி..பூனைய மடியிலே கட்டிண்டு சகுனம் பாக்குற மாதிரி....வாய மூடிண்டு பேசாம வா...எதையும் ஒளறி கொட்டிடுடாதே...பகவானே நாளன்னைக்கு கல்யாணத்தை வச்சிண்டு...என்னைய இப்படி படுத்துறயே...பேசாம என் பிராணனை எடுத்துறப் ப்டாதோ...''
''என்னை எதுக்கு கோவிச்சுக்கிறேள்...நாப்பத்தி நாலு வயசில பதினெட்டு வயசு கூட ஆகாத என்னை எதுக்கு கல்யாணம் பண்ணினேள்...இப்போ பெண்ணுக்கு முப்பத்திரெண்டு வயசில கல்யாணம் பண்றதுக்கு நாக்கு தள்றது ஓமக்கு...ம்ஹ்ம்?
''வாயை மூடுறி பைத்தியம்...ஏதாச்சும் பேசின தொலைச்சுப் புடுவேன்...ஆமா...கடவுளே...என்னை ஏன் இப்படி சோதிக்கிற''
ஆட்டோ நின்றதும் வாசற்படியில் செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த இருவர் இவர்களை நோக்கி திரும்பினர்.
அதில் ஒருவரை பார்த்து ஐயர் ''வேலாயுதம்...என்னை ஞாபகம் இருக்கா...நான் தான் வைத்திஐயர்...பிள்ளையார் கோயில்....காமாட்சி நகர்''
''அடடே...வாங்க சாமி...மறக்க முடியுமா ஒங்கள...எப்படி இருக்கீங்க'' - வேலாயுதம், கலெக்டரின் மாமனார்.
அருகே இருந்த தனது சம்பந்தியிடம் ஐயரை அறிமுகப்படுத்தினார். ''மச்சான், இவரு வைத்திய நாத ஐயர். நம்ம காமாட்சி நகர்ல குடியிருந்தப்ப அங்கே பக்கத்தில இருந்த பிள்ளையார் கோயில் குருக்கள்...நீங்க கோயிலுக்கு போற ஆளு கிடையாது...அதனால உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை...''
வேலாயுதம் ஐயரை நோக்கி ''சாமி...இவரு தான் நம்ம சம்பந்தி...காமாட்சி நகர்ல பாய் வச்சிருந்தாரே தையல் கடை அங்க தான் டெய்லர் வேலை பார்த்தாரு...நீங்க சட்டை போடுவரு இல்லை...அப்படியே தைச்சாலும் பாய் கடையில தைக்க மாட்டீங்க...அதுனால நீங்களும் இவரை பாத்திருக்க முடியாது...பரவாயில்லை...வாங்க உக்காருங்க....சொல்லுங்க...இப்போ என்ன விசயமா வந்தீங்க?
''வேலாயுதம்..அம்பிய போலிஸ் பிடிச்சுட்டு போய்ட்டா...நீதான் உன் மருமகன்கிட்ட சொல்லி அவனை வெளியே கொண்டாரனும்...இதோ பாரு நாளைக்கழிச்சு வைதேகிக்கு கல்யாணம் வச்சிருக்கேன்...இவனை போலிஸ் பிடிச்சிண்டு போய்ட்டா...இந்த வயசில என்னால எங்கே போயி யாரை பார்த்து என்ன பண்ண முடியும் சொல்லு...வேலாயுதம்...இருந்திருந்து 32 வயசில அவளுக்கு கல்யாணம்...மாப்பிளையும் என்ன மாதிரி தான்...சின்ன கோயில்..ஆனால் நிறைய ஹோமம், பூசையெல்லாம் செய்வாரு...வரும்படி இரண்டு ஜீவன் சாப்பிட தேறும்...ஏதாவது செய்ப்பா...''
வேலாயுதத்தின் சம்பந்தி, கலெக்டர் குமரேசனின் தகப்பனார் முத்தையா இடைமறித்தார் '''பதறாதீங்க...என்ன நடந்துச்சுன்னு தெளிவா சொல்லுங்க''
''சார்..ஒங்கள எனக்கு முன்னபின்ன தெரியாது...இருந்தாலும் சொல்றேன்...அவன் கொஞ்சம் வேற மாதிரி பழக்கம் உள்ளவன்...ராத்திரி ரோந்து போறவா இவன பிடிச்சிண்டு போய்ட்டா...''
''வேற மாதிரி பழக்கம் உள்ளவன்னா...?''
''அதாவது கஞ்சா கலந்து சிகரெட் பிடிப்பான்''
கோதை மாமி கோபமாக '''இதோ பாருங்கோ...என் புள்ளையப் பத்தி தப்புதப்பா பேசாதேள்...அவன் கஞ்சாவெல்லாம் பிடிக்க மாட்டான்...தங்கமான பிள்ளை...உடல் வலிக்குதுன்னு கொஞ்சம் போல அயோடெக்ஸ் சாப்பிடுவான் அவ்வளவு தான்...''
ஐயர் தலையில் கைவைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார்.
முத்தையா புரியாமல் விழித்தார். வேலாயுதம் பரிதாபமாக முத்தையாவை பார்த்தார்.
வேலாயுதம் ஐயரை நோக்கி ''சாமி...என்ன இது...நீங்க ஒண்ணு சொல்றீங்க...மாமி ஒண்ணு சொல்றாங்க.....அயோடெக்ஸ் திங்கறானா..என்ன இது?
வேலாயுதம் ''நான் என்னத்தை சொல்வேன்...அம்பிக்கு வேணாத பழக்கம்லாம் சேர்ந்துடுத்து...வெத்திலையில தான் ஆரமிச்சான் அப்படியே சிகரெட், அப்புறம் கஞ்சா இப்போ அயோடெக்ஸ்..."இவளுக்கு புத்தி பேதலிச்சி போச்சு...வைதேகி, அம்பிக்கு அப்புறம் பிறந்த ரெட்டை குழந்தைகள் ராமுவும் லட்சுவும் போனவருசம் சைக்கிள்ல போகும் போது தண்ணி லாறி மோதி ஸ்பாட்ல இறந்து போய்ட்டா...அதிலிருந்து இவளுக்கு அடிக்கடி புத்தி சுவாதீனமில்லா போகுது...என்னால முடிஞ்ச மட்டும் வைத்தியம் பாத்தேன்...மேற்கொண்டு என்னால எதுவும் செய்ய முடியல...!
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே சிவப்பு விளக்கு சுழல காவல்துறையின் வண்டி ஒன்று உள்ளே நுழைந்தது. அனைவரும் அமைதியாக இருக்கும்படி முத்தையா சைகை காட்டினார்.
மாவட்ட கண்காணிப்பாளர் உள்ளே நுழைந்தார். முத்தையாவையும் வேலாயுதத்தையும் பார்த்து வணக்கம் சொன்னவர், ஐயர் கூட இருப்பதை பார்த்து ''என்ன சார் ...வீட்ல எதுவும் விசேசமா...பூஜையா...ஹோமமா?'' என்றார்.
முத்தையா ''அதெல்லாம் ஒண்ணுமில்ல சார்...இவங்க நம்ம மச்சானுக்கு வேண்டப்பட்டவங்க...இவங்க பையன போலிஸ் பிடிச்சிட்டு போய்ட்டாங்களாம்...நாளன்னைக்கு மகளுக்கு கல்யாணம் வச்சிருக்கார்...அது தான் எதாவது உதவி செய்ய முடியுமா....ன்னு''
மாவட்ட கண்காணிப்பாளர் ஐயரை நோக்கி ''எந்த ஸ்டேசன் சாமி...என்ன பண்ணினான்னு பிடிச்சிட்டு போனாங்க?''
''இங்க தான் சார்...வ.உ.சி நகர் போலிஸ் ஸ்டேசன்...ராத்திரி ரோந்து போனவா பிடிச்சிட்டு போய்ட்டா''
''யாரையும் நாங்க சும்மா பிடிக்கிறதில்ல சாமி...சந்தேகம் இருந்தா மட்டும் தான் பிடிப்போம்...உங்க பையன் என்ன பண்ணினான் அதை சொல்லுங்க முதல்ல..''
''அவன் கொஞ்சம் கஞ்சா பிடிப்பான்...செட்டியார் பாலத்துக்கிட்ட''
மாமி தன்னிலை இழந்தவளாக மீண்டும் எகிறினாள் ''அபத்தமா பேசாதேள்...அம்பி அப்படிபட்டவன் இல்லை சார்...கொஞ்சம் போல அயோடெக்ஸ் சாப்பிடுவான் அவ்வளவுதான்...அப்பறம் சத்தம் எதுவும் போட மாட்டான் அமைதியா இருப்பன்...எம்புள்ளையினால ஒரு தொந்தரவும் யாருக்கும் இருக்காது...தங்கம்...''
வேலாயுதம் ''சார்..இதைத்தான் வந்ததிலிருந்து சொல்லிக்கிட்டுருக்காங்க மாமி...ஏன் சார் அயோடெக்ஸ யாராவது சாப்பிட முடியுமா?''
''இல்ல...இது பிரச்சினை வேற மாதிரி போகுது...அயோடெக்ஸ யாரும் சாப்பிட மாட்டாங்க...பஞ்சாப்ல தான் அந்த பழக்கம்...இந்தம்மா சொல்றது அபின்னு நினைக்கிறேன்....நீங்க கொஞ்சம் உள்ளே வர்றீங்களா...''
வேலாயுதமும் முத்தையாவும் ஐயரை காத்திருக்க சொல்லிவிட்டு வீட்டினுள் சென்றனர்.
''இதோ பாருங்க சார்...இதென்னவோ நார்காட்டிக்ஸ் கேஸ் மாதிரி தெரியுது..தேவையில்லாம உங்க மகனை இதுல தலையிட சொல்லாதீங்க...பேர் கெட்டு போகும்...நான் என்னால முடிஞ்ச அளவு உதவி பண்றேன்...என்ன ஸ்டேசன் சொன்னாங்க...வ.உ.சி, நகர் தானே...அது நம்ம டிஸ்ட்ரிக்லேயே வராது...காஞ்சிபுரம் ரேஞ்ச்ல வரும்...ஏ.சி.ஜெயராஜ்கிட்ட பேசுறேன்...கொஞ்சம் பொறுமையா இருக்க சொல்லுங்க...டைம் எடுக்கும்...விசயத்தை கவனமா கையாளணும்...மேட்டரை உங்க புள்ளகிட்ட கொண்டு போகாதீங்க...''
பேசிக் கொண்டிருக்கும் போதே கலெக்க்டரின் மனைவி வந்து கண்காணிப்பாளருக்கு காபி தந்துவிட்டு வேலாயுதத்திடம் ''யாருப்பா அது வெளில?'' என்றாள்.
வேலாயுதம் ''உன் கூட படிச்சானே அம்பி அவனோட அம்மாவும் அப்பாவும் வந்திருக்காங்க...அம்பியை போலிஸ் பிடிச்சிட்டு போய்ட்டாங்களாம்...'' என்றார்.
''ஏன்...என்ன பண்ணினான்...அவன் ஒரு அசமந்தமாச்சே...அப்பாவிப்பா அவனுக்கு ஒன்னுமே தெரியாது...பாவம்பா''
காவல்துறை கண்காணிப்பாளர் ''அம்மாடி...நீ இதுல தலையிடாதே...நான் பாத்துக்கிறேன்...வாயும் வயுறுமா இருக்கிறவங்களுக்கு இந்த டென்சனே கூடாது...இன்னைக்கு இண்டர் டிபார்ட்மெண்ட் மீட்டிங் இருக்கு...போறதுக்குள்ள வழியில நிறைய முடிவு எடுக்க வேண்டிய சமாச்சாரங்கள் இருக்கு...அவரை பிக்கப் பண்றதுக்குத்தான் நான் வந்தேன்...சீக்கிரம்....போ...போயி உங்க வீட்டுக்காரரை அனுப்பு
கோதை மாமி அந்த பங்களாவே தனக்கு சொந்தமானதைப் போல அங்கிருந்த பூ ஜாடிகளையும் செடிகளையும் காதலோடு வருடிக் கொடுத்து பேசிக் கொண்டிருந்தாள். ஐயருக்கு ரத்த அழுத்தம் எகிறிக் கொண்டிருந்தது.
கோதை மாமி ''பாத்தீங்களா டெய்லர் பையன்லாம் கலெக்டர் ஆயிட்டான்...அவனுக்கு ஆட்டோக்காரன் பொண்ணு கொடுத்துருக்கான்...நம்ம இப்படி அவங்ககிட்ட அல்லாடிக்கிட்டு இருக்கோம்...பகவான் எப்படி லோகத்தை மாத்திண்டிருக்கார் பாத்தேளா...?
ஐயர் ஒரு கையாளாகத்தனமான பார்வையுடன் ''அவாள்லாம் படிச்சா...அரசாங்க உத்யோகத்திற்கு போய்ட்டா..ஏன் அம்பிக்கு என்ன கொறைச்சல்...எஸ்.எஸ்.எல்.சில கணக்குல நூத்துக்கு நூறு வாங்கினவன் தானே...அப்புறம் சகவாசம் சரியில்ல..வெற்றிலை போட்டான் கண்டிச்சேன்...நீ விடலை....புகையிலை போட்டான்...அப்பவும் கண்டிச்சேன்...நீதான் விடலை...அப்புறம் சிகரெட், கஞ்சா இப்போ அயோடெக்ஸ்ல வந்து நிக்குது...திருவையாறு பாடசாலைக்கு நான் அனுப்பினா நீ போய் கூட்டாந்து பக்கதில வச்சிக்கிறாய்...அழகு பெத்த புள்ளைகள தண்ணி லாரிக்கு தூக்கி கொடுத்துட்டு இப்போ இருக்குறவனையும் தொலைச்சு புடுவோமோன்னு பயமா இருக்கு..ஒன்னை மாதிரி ஒருத்தியையும் வச்சிண்டு...நான் என்னத்தை பண்றது''
கலெக்டர் மனைவி இருவருக்கும் வணக்கம் சொல்லி காபி தந்தாள்.
''ஏண்டி பொண்ணே...ஆட்டோகாரர் வேலாயுதத்தோட பொண்ணு தானே நீயி...ஆமா நெத்திச்சுடி வச்சிருக்கிறயா...இருந்தாக் கொடேன்...கலெக்டர் பொண்டாட்டி நீயி...நெத்திச்சுடி இல்லாம இருக்குமா......வைதேகிக்கு நாளன்னைக்கு கல்யாணம்....நாலு நாள்ல திருப்பி கொடுத்துடுறேன்!
அந்த கர்ப்பிணிப் பெண் மாமியை ஒரு மாதிரியாக பார்த்தாள். ஐயர் தலையில் அடித்துக் கொண்டார்.
''கோதை.. என்னை ஏண்டி கொல்ற...பேசாம வாயை மூடிண்டு இரு...நீ போம்மா...அவளுக்கு கொஞ்சம் சித்தம் சரியில்ல....''
பொருள் சுமந்த சொற்கள்: (2)
சிறிது நேரம் கழித்து கண்காணிப்பாளரும் கலெக்டரும் புறப்பட்டு போக, காரில் ஏறுவதற்கு முன் கண்காணிப்பாளர் வேலாயுதத்தை அழைத்து ''நீங்க அவங்களோட ஸ்டேசன் போயி பையனை கூப்ட்டுக்கோங்க...யாராவது கேட்டா ஏ.சி,ஜெயராஜிகிட்ட நான் பேசிக்கிறதா சொல்லுங்க...விசயம் வேற யாருக்கும் தெரியக்கூடாது...சரியா...?''
வேலாயுதம் சட்டையை அணிந்து கொண்டு மாருதி காரை கிளப்பினார். மாமி ஒய்யாரமாக முன் சீட்டில் அமர்ந்து கொண்டாள்.
''எனக்கு பின்னாடி ஒக்காரவே பிடிக்காது...முன்னாடி ஒக்காந்தா தான் வேடிக்கை பார்த்துக்கிட்டே வரலாம்''
கார் கலெக்டர் பங்களாவைத் தாண்டி வெளியே வரும் போது மாமி வேலாயுதத்திடம் ''ஏன்...இப்படி ரெண்டு பேரும் உம்முனு வர்றேள்...கொஞ்சம் பாட்டு...பழைய பாட்டு இருந்தா போடுங்கோளேன்...என்று அருகே இருந்த சி.டி,பிளேயரின் ஏதோ பட்டனை தட்ட அதில் சந்தனக்காற்றே செந்தமிழ் ஊற்றே என்று பாட்டு உச்ச சத்தத்தில் அலறியது. சத்தத்தை வேலாயுதம் குறைத்தார்.
''இது தனிக்காட்டு ராஜானு ரஜினியும் ஸ்ரீதேவியும் நடிச்ச படம். இந்த பாட்டை படத்தில கட் பன்ணிட்டா...அம்பி அதை அவனோட மொபைல் போனில் போட்டுக்காட்டினான். ஸ்ரீதேவி கட்டியிருக்கிறா மாதிரி அதே வெள்ளைக்கலர் புடவை ஒன்னு ....வாங்கணும்....ஏன்னா வாங்கித் தர்றேளா...''
''வாங்கலாம் கோதை...வாங்கலாம்....மொதல்ல அம்பி வரட்டும்...வேலாயுதம் நீங்க ஒண்ணும் வித்தியாசமா நெனைக்கப் ப்டாது....அவளுக்கு சித்தம் சரியில்லை...எனக்கு ஏன் இப்படி ஒரு எழுத்தை தெய்வம் எழுதுச்சோ தெரியலை...வாழவும் முடியல...சாகவும் வழியில்ல...! ஐயரின் கண்களில் நீர் கோர்த்திருந்ததை கார் ஓட்டிக் கொண்டிருந்த வேலாயுதம் கவனிக்க தவறவில்லை.
''கவலைப்படாதீங்க சாமி...எல்லாம் சரியாயிடும்....வேறென்னத்தை நான் சொல்றது''
கார் சீரான வேகத்தில் சாலையில் போய்க்கொண்டிருக்க, நடைபாதைக்கடையில் தர்ப்பூசணி பழங்கள் விற்பதை மாமி கண்டாள்.
''ஏன்னா...தர்ப்பூசணி சீசன் ஆரம்பிச்சிடுத்து...அம்பி விரும்பி சாப்பிடுவான்...வீட்டுக்கு போகும் போது ஒண்ணு வாங்கணும்...மறந்துடாதேள்...''
''வாங்கலாம்...மொதல்ல அம்பி வரட்டும்....''ஐயருக்கு வார்த்தைகள் வரவில்லை.
கார் காவல் நிலைய வாசலில் நின்றதும் காவலுக்கு நின்ற காவலர் வேலாயுதத்தை கண்டு கொண்டார்.
''ஐயா...நீங்க எங்க இங்க...சொல்லிவிட்டா நாங்களே வந்திருப்போமே....''
''இல்லை அது வந்து...இவங்க நம்மளுக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க...இவங்க பையனை பிடிச்சி இங்கதான் வச்சிருக்கிறதா சொன்னாங்க...காலையில எஸ்.பி வீட்டுக்கு வந்தவரு ஏ.சி.ஜெயராஜ்கிட்ட சொல்றேன்...ஸ்டேசன்ல போய் கூப்ட்டுக்கோங்கனு சொன்னாரு...அது தான் வந்தோம்...பையன் உள்ளேதான இருக்கான்..?''
காவலர் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு ''நீங்க கொஞ்சம் தனியா வர்றீங்களா...?"
''சாமி நீங்க கொஞ்ச நேரம் பின்னாடி அந்த பெஞ்ச்ல ஒக்காருங்க...இதோ வந்துடுறேன்...இங்கே ஏதாவது எழுதிக் கொடுக்கனும்னு நினைக்கிறேன்''
மாமி ''ஏன்னா...அம்பி இங்கே தான் எங்கேயோ இருக்கான்...அவன் வாசனை எனக்கு வருது...நீங்க செத்த இருங்கோ...நானே கண்டுபிடிக்கிறேன்'' என்று காவல் நிலையத்தின் பக்கச்சுவரை ஒட்டி நடந்தாள். ஐயருக்கு அந்த இடத்தில் அமரவோ அதே வேளையில் அங்கிருந்து விலகவோ மனமில்லாமல் நின்றபடியே கையில் பூணூலைப் படித்துக் கொண்டு ஜெபித்துக் கொண்டிருந்தார்.
காவலர் வேலாயுதத்திடம் ''ஐயா, சொல்றேன்னு அதிர்ச்சி ஆகாதீங்க...நேத்து ராத்திரி செட்டியார் பாலத்துக்கிட்ட ரெய்டு போனப்பதான் பையன் மாட்டினான்...விசாரிக்கும் போது இன்ஸ்பெக்டர் லேசா தட்டினாரு...பையன் சுருண்டு விழுந்து பேச்சு மூச்சில்லாம இருந்தான்...அப்பறம் கொஞ்சம் நேரத்தில உடம்பு விறைச்சி போச்சு...செத்துப் போய்ட்டான்...மேலதிகாரிங்க யாருக்கும் விசயம் தெரியாது...நீங்க விசயத்தை பெரிசு படுத்தாம இங்கயிருந்து போயிடுங்க...பாடியை திருப்பி செட்டியார் பாலத்துக்கிட்டயே நாங்க போட்டுருவோம்...ஒரு பதினோரு மணி போல போயி எடுத்துக்கோங்க...யாருக்கும் ஒரு பிரச்சினையும் இல்ல...இல்லைனா போஸ்ட்மார்ட்டம் அது இதுனு அலையவிட்டு சாகடிப்பானுக...புரிஞ்சுக்கோங்க...''துளியும் பதட்டமில்லாமல் சர்வ சாதாரணமாக அவர் பேசிக்கொண்டே போனார்.
வேலாயுதத்திற்கு கால்களுக்கு கீழே பூமி நழுவியது. அருகே இருந்த மரச்சன்னலை பிடித்துக் கொண்டு ''ஐய்யயோ...நான் அந்த பையன பெத்தவங்களுக்கு என்னன்னு சொல்லி புரியவைப்பேன்...?''
காவலர் ''ரொம்ப முக்கியமான விசயம்...ஒங்க மருமகனுக்கு இது தெரியக்கூடாது...''
வேலாயுதம் ''அப்போ எஸ்.பி...?''
''அவர் டிபார்ட்மெண்ட் ஆளுங்க...அவர் எங்களுக்கு தான் சப்போர்ட் பண்ணுவாரு...''
''ஐயா இது கொலையில்லையா...நாளன்னைக்கு அவன் அக்காவுக்கு கல்யாணம்யா...பாவம் அந்த பொண்ணுக்கு 32 வயசுல இப்போதான் ஒரு வாழ்க்கை கிடைச்சிருக்கு''
''சார்...சொல்றத புரிஞ்சுக்கோங்க...வேணும்னு நாங்க செய்யல...ஒரு கோபத்தில தான் இன்ஸ்பெக்டர் அடிச்சாரு...பையன் சுருண்டுட்டான்...இப்போதைக்கு நான் சொல்றது தான் ஒரே வழி...சீக்கிரம் கிளம்புங்க...பாடியை பதினோரு மணிக்கு பாலத்துக்கிட்ட போயி எடுத்து காரியம் பண்ணிடுங்க...''
தள்ளாடியபடியே வேலாயுதம் ஐயர் அருகே வந்து நின்று எப்படி சொல்வது என்று கையை பிசைந்து கொண்டு நின்றார்.
ஜெபித்துக் கொண்டிருந்த ஐயருக்கு அருகே மாமி இல்லாததை கண்ட வேலாயுதம் ''சாமி...சாமி...மாமி எங்கே?'' என்றார்.
நிதானத்திற்கு வந்த சாமி ''இங்கே தான் எங்கேயோ அம்பி இருக்கான்...வாசனை வருதுன்னு சொன்னாள்...தெரியலையே...''
''என்ன சாமி..ஏற்கனவே மாமிக்கு சித்த சுவாதீனம் இல்லை...கொஞ்சம் கவனமா பாத்திக்கிட வேணாமா...ம்ம்''
வேலாயுதம் காவல் நிலையத்தின் பக்கவாட்டுச்சுவரை ஒட்டி ஐயரின் கையை பிடித்துக் கொண்டு நடந்தார். மழையில் நனைந்த சுவர்கள், சுவரில் சாத்தி வைக்கப்பட்டிருந்த பழைய, புதிய சைக்கிள்கள், மோட்டர் பைக்குகள் என ஈரம் மக்கிப் போன அந்த மண்ணில் புதிதாய் முளைத்த இளந்தளிர்களை மிதித்தபடியே இருவரும் நடந்தனர்.
நீண்ட சுவரின் வலது புறம் திரும்பி இருவரும் மாமியின் குரல் கேட்டு விக்கித்து நின்றனர்.
''அம்பி...இதோ பாரு...அப்பாவும் ஆட்டோக்காரர் வேலாயுதமும் உன்னை கூட்டிண்டு போறதுக்கு வந்திருக்கா...ஆமா...வேலாயுதத்தோட மருமகன் யாரு தெரியுமா...நீ ஒருதலையா லவ் பண்ணினயே லட்சுமி அவளோட ஆத்துக்காரன் தான்...அவன்தாண்டா... இப்போ கலெக்டர்..அவகிட்டதான் வைதேகி கல்யாணத்துக்கு நெத்திச்சுடி கேட்டிருக்கேன்...அப்புறம் மாப்பிள்ளைக்கு வாட்சு போடணுமாம்...நீதான் போடணும்...நம்ம லட்சு ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்தப்போ ஹெட்மாஸ்டர் குடுத்தாரே அதைத்தான் எடுத்து வச்சிருக்கேன்...ராத்திரி எடுத்துப்பார்த்தேன்..அது ஓடவே இல்லை...ரெண்டு குலுக்கு குலுக்கினேன்...ஓட ஆரம்பிச்சிடுத்து...ஜானவாசத்துக்கு கார் கேட்டா அதெல்லாம் முடியாதுன்னு சொல்லிப்புட்டேன்...அம்பது வயசுக்காரனை இவன் தான் எங்காத்து மாப்பிளைன்னு ஊருக்கு காட்டணுமாக்கும்...இதோ பாரு எந்திரிடா செல்லம்....இனிமே இங்கே இருக்காதே...பேசாம திருவையாறு பாடசாலைக்கு போயிடு...ரெண்டே வருசம் தான்...அப்புறம் ஒன் தோப்பனாருக்கு ஒரு புள்ளையார் கெடச்ச மாதிரி ஓனக்கும் ஒரு புள்ளையார் கெடைக்காமலா போயிடும்...இனிமே அயோடெக்ஸ் சாப்பிடாதேடா...நீ கஞ்சா பிடிக்கிறேன்னு உங்கப்பா கலெக்டர் ஆத்தில வச்சு சொல்றார்...பெத்தவ எனக்கு எப்படி இருக்கும்....என் புள்ள அப்படிப்பட்டவன் இல்லைன்னும் கண்டிச்சி சொல்லிப்புட்டேன்...கண்ணு எழுந்திரிடா...நாளன்னைக்கு வைதேகிக்கி கல்யாணம்...அப்பாவுக்கு வயசாயிடுத்து இல்லையா...நீதானே அவருக்கு ஒத்தாசையா இருக்கணும்...கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்பறம் வைதேகிக்கு சாந்தி கல்யாணம் ஆன பின்னாடி நீ கொஞ்சம் போல அயோடெக்ஸ் சாப்டுக்கோ...அம்மா ஒண்ணும் சொல்ல மாட்டேன்...சரியா...அப்புறம்...வைதேகியோட புக்காத்துல உனக்கு வேட்டி துண்டுதான் தருவேன்னு சொன்னா நான் தான் அவனுக்கு பேண்ட் சர்ட் எடுத்துக் கொடுங்கோன்னு கட் அன் ரைட்டா சொல்லிபுட்டேன்...பொண்ணோட பொறந்த ஒரே ஆம்பளை நீ...சிம்பிளா வேட்டி துண்டு கொடுத்து கடமையை கழிக்க நெனச்சா நான் விடுவேனா...என்னடா இது உன் முகம் நீ பொறந்தப்போ எப்படி இருந்துச்சோ அப்படியே இருக்கு....உன் அப்பாவோட பொறந்த அத்தைதான் எனக்கு பேறுகாலம் பார்த்தாள். அவதான் சொன்னா பாருங்கோ மன்னி குழந்தை சூரியனை ஒடைச்சு எடுத்த துண்டு மாதிரி ஜொலிக்கிதுன்னுட்டு...அதுனால தான் ஒனக்கு ரகுராமன்னுட்டு பேரு வச்சேன்...இப்போ அவ ஆளும் குணமும் மாறிப் போய்ட்டா...பத்திரிக்கை கொடுக்க போனப்பக்கூட ''மன்னி கல்யாணத்த எப்படி பண்ண போறேள்...இந்தாங்க என்னால முடிஞ்சது அப்படின்னு ஒரு பத்தாயிரம் காசு கொடுத்தா என்னவாம்...அவ ஆத்துக்காரனுக்கு என்ன எல்.ஐ.சில பியுனா இருக்குறான்...தினமும் வரும்படி உண்டு...ம்ஹ்ம்...என்னத்தை சொல்ற்து...சரி...சரி....நீ எந்திரி...நம்ம போகலாம்....!
ரகுராமன் சுவற்றின் ஓரமாக கிடத்தி வைக்கப்பட்டிருந்தான். கண்களிலும் உதடுகளின் வழியே பற்களின் மீதும் வந்தமர்ந்த ஈக்களை விரட்டியபடி மாமி பேசிக்கொண்டேயிருந்தாள். பேசுவதற்கு அவளிடம் ஏராளமான சொற்கள் இருந்தன. அதைக் கேட்பதற்கு ரகுராமன் என்னும் அம்பியின் காதுகளும் திறந்தே இருந்தன....!

Wednesday, February 1, 2017
பட்ஜெட் பலாபலன்கள் 2017-18 (துலாம் முதல் கன்னி வரை)
துலாம்:
துலாம் ராசி குடிமக்களே!
இந்த ஆண்டு பட்ஜெட் உங்கள் தூக்கத்தை கெடுக்கும் விதமாக கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு என பல்வேறு வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக, வேலை கிடைக்காது, அயல் நாட்டில் வேலை பார்த்தால் சுபகிரகமான அமெரிக்கா இப்போது பாவகிரகமான டொனால்ட் ட்ரம்பின் சாரத்தில் சஞ்சாரம் செய்வதால் அந்த வேலையும் பறி போகும். அதற்கு மற்றொரு பாதகாதிபதியான மோடியும் உதவுவார்.
பரிகாரம்:
சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகம் சென்று அங்குள்ள தூதரை சிவப்பு ஒயின் கொண்டு வழிபாடு செய்யவும்.
கூடுதலாக, டில்லியில் வீற்றிருக்கும் ஜனாதிபதிக்கு ஏலக்காய் மாலை சாற்றி இரண்டு நெய் தீபம் பிரதி ஞாயிறு ஏற்றவும். இயலாதவர்கள் டாஸ்மாக்கில் ஆஃப் வோட்கா வாங்கி தண்ணீர் கலக்காமல் அடித்து மட்டையாகி விடவும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசி குடிமக்களே!
ஏற்கனவே ஏழரைச்சனியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நீங்கள் இப்போது ஜன்ம சனியான மோடியின் மூன்றாம் பார்வையாலும் விரய சனியான ஜெட்லியின் பார்வையாலும் விபரீத விளைவுகளை சந்திக்க இருக்கிறீர்கள், கடன் கொடுத்தவர் கொடுத்த கடனை திருப்பி கேட்பார். வீட்டுக்காரர் வாடகை கேட்பார். பால்காரர் தண்ணீர் அதிகம் கலப்பார். விரயச்சனியான அருண் ஜெட்லி வருமான வரி என்ற பெயரில் அவ்வளவு பணத்தையும் அள்ளி கொண்டு போவார்.
பரிகாரம்:
டெல்லியில் இருக்கும் மோடியில் இல்லம் சென்று அவர் வீட்டின் முன் அமர்ந்து ''ஐயய்யோ எங்களை விட்று''என்று கதறி மனமுருகி வேண்டிக் கொண்டால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் விமோசனம் கிட்டும் வாய்ப்புண்டு.
தனுசு:
தனுசு ராசி குடிமக்களே!
உங்களுக்கு இத்தனை பிலிம் காட்டி வந்த மோடியும் அருண் ஜெட்லியும் வக்ரகதியில் இயங்குவதால் அவர்களின் சுயரூபம் தெரிய வரும். வருமானம் இராது ஆனால் வரி கட்டுவீர்கள். கோடி வீடு கட்டும் திட்டம் என்ற பெயரில் அதானிக்கு காண்டிராக்ட் கிடைக்கும் உங்களுக்கு தெருக்கோடி மட்டுமே கிட்டும். கோவணத்தை இறுக கட்டுக்கொண்டு தூங்குவது மானத்தை காக்கும்.
பரிகாரம்:
டெல்லி சென்று அருண் ஜெட்லிக்கு பால் குடம் எடுத்து அதை அபிசேக ஆராதனை செய்துவர உக்கிரம் குறையலாம். பாலில் கோமியம் கலந்து அபிசேகம் செய்து வர சிறப்புப் பலனுண்டு. அப்படியே பாலில் சிறிது பசுஞ்சாணம் கலந்து மோடிக்கு அபிசேகம் செய்யலாம்.
மகரம்:
மகர ராசி குடிமக்களே!
உங்கள் ராசிக்கு பத்தாம் அதிபதியான ஜெட்லி தனது லக்கினாதிபதி வீடான மோடியை பார்ப்பதால் உங்களுக்கு புதுக்கடன் உருவாகும். விவசாயத்திற்காக கடன் வாங்கி அதை கட்ட முடியாமல் உங்கள் நட்சத்திர நாதனான ஓ.பன்னீர் செல்வமும் கைவிட பூச்சி மருந்து குடித்து உயிர் விட நேரிடும்.
பரிகாரம்: உங்களை தற்காத்துக் கொள்ள கருப்பு நிறத்தில் ஆடை அணியவும். போயஸ்கார்டன் சென்று சின்னம்மாவை தரிசித்து மண் சோறு சாப்பிடுதல் நலம். பூச்சி மருந்திற்கு பதிலாக கோக் அல்லது பெப்சி குடிக்க வலியில்லாமல் எமனிடம் சென்று சேரலாம் என்றும் ஜோதிட விதிகள் கூறுகின்றன.
கும்பம்:
கும்ப ராசி குடிமக்களே>
அருண் ஜெட்லியும் மோடியும் ஒரே வீட்டில் அமர்ந்து உங்கள் லக்கினாதிபதியை மூன்றாம் பார்வையாக பார்ப்பது ஆறுதலைத் தருமென்றாலும் இதை மிகச் சிறப்பான இடம் என்று உறுதியாக கூற இயலாது. வரிச்சுமையும், எரிபொருள் விலையேற்றமும் நீட் தேர்வும் உங்கள் தூக்கத்தை தொலைக்கச் செய்யும்.
பரிகாரம்:
எல்.கே.அத்வானிக்கு வடைமாலையும் ஸ்மிருதி இரானிக்கு எலுமிச்சையில் விளக்கும் ஏற்றி வழிபட பலன் கிட்டும்.
மீனம்:
மீன ராசி குடிமக்களே!
விரக்தியின் உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தக்கூடிய நிலையில் ஜெட்லியும் மோடியும் நிலைகொண்டுள்ளனர். அவர்களால் உங்களுக்கு வாகன செலவு, கல்வி செலவு, கழிப்பறை செலவு என கண்ணை கட்டும் செலவுகள் வரப்போகின்றன. வக்ரகதியில் இயங்கும் மோடியின் நேரடி பார்வை உங்கள் ராசியில் பதிவதால் நாய் உங்களை துரத்திக் கடிக்கும் வாய்ப்பு அதிகம்.
பரிகாரம்:
தினமும் ஆஃப் வோட்கா தண்ணீர் மட்டும் கலந்து ஊறுகாய் இல்லாமல் சாப்பிட்டு வர பலன் கிட்டும். ஐய்யப்பனுக்கோ முருகனுக்கோ மாலை அணிந்து இதை செய்வது கூடுதல் மற்றும் உடனடி பலனைத் தரும்.

பட்ஜெட் பலாபலன்கள்: 2017 18 (மேஷம் முதல் கன்னி வரை)
பட்ஜெட் ஜாதகம்: 2017 18
மேஷம்:
மேஷ ராசி குடிமக்களே! இந்த ஆண்டு உங்கள் ராசியின் அதிபதியாகிய அருண் ஜெட்லி பாதகாதிபதியாகி ஒன்பதாம் இடத்தில் மோடியை பார்ப்பதால் மருத்துவ செலவு அதிகமாகும். உளுந்தம் பருப்பில் சாம்பார் வைப்பதை குறைத்துக்கொண்டு பாசிப்பருப்பில் சாம்பார் வைப்பது மருத்துவ செலவை குறைக்கும். மோடி இந்த வருடம் ஏப்ரல் மாதத்துவக்கத்தில் இருந்து வக்ரகதியில் இயங்குவதால் பாக்கெட்டில் இருக்கும் பணம் வேகமாக கரையும். ஏடிஎம்மில் பணம் எடுக்கப் போனால் உங்கள் முறை வரும் போது மெசினில் பணம் தீர்ந்து போயிருக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமை தோறும் டாஸ்மாக்கில் கிடைக்கும் பிராந்தி ஒரு குவார்ட்டர் தண்ணீர் கலக்காமல் அருந்தவும்.
ரிஷபம்: ரிஷப ராசி குடிமக்களே! வருடத்தின் ஆரம்பத்திலேயே காளையைக் கொண்டு ஒரு அரசியலை மோடி ஒரு முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதாக இருந்தாலும் அது முடிவல்ல. உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் மோடி இருப்பதால் மனத்தில் ஒரு நிம்மதி இன்மை தொந்தரவு இருந்து கொண்டிருக்கும். பணம் கையில் இருந்தாலும் செல்லாது, செல்லும் பணம் இருந்தாலும் பொருள் எதுவும் வாங்கும் விலையில் கிடைக்காது.
பரிகாரம்: டெல்லியில் இருக்கும் பாராளுமன்றம் சென்று ''மோடி வாழ்க'' என்று 101 முறை கோஷம் போட்டு வர பிரச்சினையின் தீவிரம் குறையும்.
மிதுனம்:
மிதுன ராசி குடிமக்களே!
இந்த ஆண்டு ஒரு கடுமையான பொருளாதார சூழலை எதிர்கொள்ளப் போகிறீர்கள். பத்தில் அருண் ஜெட்லி ஒன்பதில் மோடி. பாவ கிரகங்கள் அடுத்தடுத்த வீட்டில் இருந்தால் மல்லையாவே ஆனாலும் மண்ணாகிப் போவான் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. அதன்படி உங்களுக்கு கேடுகாலம் துவங்கி விட்டது. நாசமாய் போவதற்கு எல்லாவிதமான திட்டங்களும் அருண் ஜெட்லி தனது பட்ஜெட் வாயிலாக தரப்போகிறார்.
பரிகாரம்:
பிரதி மாதம் வருமான வரி அரசு கேட்டபடி கட்டி விடவும். வங்கியில் கடன் வாங்கி திருப்பி தரவேண்டி இருந்தால் வெளிநாடு தப்பி செல்ல ஒன்பதாம் இடத்து மோடி உதவி செய்வார். சரக்கடிக்கும் போது ஊறுகாய் தொட்டுக் கொள்வதை தவிர்க்க நல்ல பலனுண்டு.
கடகம்:
கடக ராசி குடிமக்களே,
பாதகாதிபதியான அருண் ஜெட்லி ஒன்பதாம் இடத்தில் இருந்து பத்தாம் இடத்திலிருக்கும் மோடியை வக்ரபார்வை கொண்டு பார்ப்பதால் உங்கள் மனைவி உங்களுக்கு தெரியாமல் சேமித்து வைத்திருக்கும் சேமிப்பு கரையும். மேலும் பிள்ளைகளின் கல்வி செலவை மூன்றாம் இடத்திலிருக்கும் பிரகாஷ் ஜவ்டேகர் பலமடங்கு உயர்த்தி உங்களை கடனாளியாக்குவார்.
பரிகாரம்:
வீட்டில் ஸ்மிருதி இரானி படத்திற்கு எலுமிச்சம் பழம் மாலை சாற்றி வழிபடுவது பிரச்சினைகளை குறைக்கலாம். பிரதி சனிக்கிழமை மாலை விஸ்கியில் சோடா கலந்து குடித்து வர கவலையை சற்று நேரம் மறக்கலாம்.
சிம்மம்:
சிம்ம ராசி குடிமக்களே!
உங்கள் ராசிக்கு பாதகாதிபதியான மோடி ஏழாம் பார்வையாக மற்றொரு பாதகாதிபதியான அருண் ஜெட்லியை பார்ப்பது சிறப்பான நிலை அல்ல. சோற்றுக்கே சிங்கி அடிக்க வேண்டி வரும். கடன் வாங்கி வட்டி கட்ட முடியாமல் திணறுவீர்கள். துவரம் பருப்பை அதானி குழுமம் பதுக்கி வைத்து விற்பதால் சாம்பார் வைக்கத் திணறுவீர்கள். கட்டிட தொழிலாளர்கள் மணல் கிடைக்காமல் வேலை இழப்பார்கள்.
பரிகாரம்:
மோடி முன்னாள் ஆட்சி செய்த குஜராத் சென்று அவரால் பாதிக்கப்பட்ட / கொளுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு அஞ்சலி செலுத்தி வர நல்ல பலன் கிட்டும். அடுத்து வரும் தேர்தலில் முகனூலில் இவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வர உலகத்திற்கே நன்மை உண்டாகும். வெயில் காலத்தில் பட்ஜெட் அமுலாக்கப்படுவதால் பீர் சாப்பிடவும். ரம்மை தவிர்க்கவும்.
கன்னி:
கன்னி ராசி குடி மக்களே,
இந்த பட்ஜெட்டிற்கு பின்னால் உங்கள் வாழ்க்கை சூன்யமாக போகிறது. வரி கட்டி மாளாது. கடனுக்கு வட்டி கட்டி தீராது. சிகரெட் விலை பன்மடங்கு உயரவிருப்பதால் நிம்மதியாக புகைக்கக் கூட முடியாது. உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் பாதகாதிபதி நீசம் பெற்று மோடியை ஐந்தாம் பார்வையாக பார்ப்பதால் பிள்ளைகள் நீட் என்னும் தேர்வின் மூலம் மருத்துவக் கல்வி பெறுவது தடைபடும்.
பரிகாரம்:
சென்னை கடற்கரைக்கு எதிரே அமைந்துள்ள தமிழ் நாடு தலைமை செயலகம் முன்பு அமர்ந்து அங்கே வீற்றிருக்கும் ஓ. பன்னீர் செல்வத்திற்கு மிக்சர் படைத்து வழிபாடு செய்ய பலன் கிட்டும்

Tuesday, January 24, 2017
ஜல்லிக்கட்டும் தேசிய கீதமும் - 22/01/2016
சனிக்கிழமை (22/01/2016) மதியம் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்.
ராமாபுரம் சிக்னல் தாண்டி டி.எல்.எஃப் அருகே போராட்டக்குழு குழுமியிருந்தது. வளாகத்தின் பிரதான வாயிலில் வாகனங்கள் வரும் வழியில் பாதியை மறைத்து போராட்டக்குழுவினர் அறவழியில் கோசங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். வளாகத்திலிருந்து வெளியே வரும் வாகனங்களுக்காக சாலை வாகனங்கள் ஒருபுறம் நிறுத்தப்பட்டன. இந்த இடைவெளியில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் என்னை அணுகி போராட்டம் குறித்த எனது பதிவை கேட்டார்.
''சார்...இந்த போராட்டம் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?''
''நான் போராட்டத்தை ஆதிரிக்கிறேன்...போராட்டக்குழுவோடு இணைந்திருக்கிறேன்...எங்கள் பாரம்பரியத்தை காப்பது எங்கள் கடமை''
''இவர்கள் கோஷம் போடும் போது பிரதமரையும் முதல்வரையும் கடுமையாக விமர்சிக்கிறார்களே அது தவறல்லவா?''
''எதனால் அதை தவறு என்கிறீர்கள்?''
''இல்ல சார்....இத செஞ்சது காங்கிரசு ஆட்சி...அதுக்கு மோடி என்ன செய்வாரு?''
''காங்கிரசு செஞ்சது அவ்வளவும் தப்பு...நாங்க வந்தா அம்புட்டையும் தூக்கி நட்டமா நிறுத்துவோம்னு தானே அவரு சொன்னாரு...இப்போவும் நாங்க அதைத்தான் சொல்றோம்...அவர்கள் செய்தது தவறு...நீங்கள் அதை சரி செய்யுங்கள் என்று தான் சொல்கிறோம்.''
''தேசியக்கொடியை தலைகீழாக பிடிப்போம்...அரைக்கம்பத்தில் பறக்க விடுவோம்னு சொல்றாங்களே...இதெல்லாம் தப்பில்லையா சார்''
''தேசியக்கொடி ஒரு அடையாளம்...முதலில் இந்தியா ஒரு தேசமல்ல...அது பல்வேறு தேசங்களை உள்ளடக்கிய ஒரு நாடு...அனைத்து தேசங்களின் தனித்தன்மையையும் பண்பாட்டையும் காக்கும் வரைக்கும் தான் இந்த அடையாளம் செல்லுபடியாகும்...!''
''இந்தியா ஒரு தேசமில்லையா...எப்படி சார்...தேசியகீதம்னு சொல்றோமே''
''அது வடமொழிங்க....தமிழர்களாகிய நாங்கள் ''நாட்டுப்பண்'' என்று தான் சொல்வோமே ஒழிய தேசியகீதம்னு அதை சொல்லமாட்டோம்''
செய்தியாளர் ஒலிவாங்கியை பிடுங்கிக் கொண்டு மின்னலாய் மறைந்தார்.
Sunday, January 22, 2017
திருமண நாள்: - 23-01-2017
இன்று எங்கள் திருமண நாள்:
வழக்கமாக வாழ்த்துப்பாவை வெண்பா நடையில் எழுதும் எனக்கு ஆங்கிலத்தின் சோனெட் (Sonnet) என்று சொல்லப்படக் கூடிய பாணியில் எழுத என் மனைவி தூண்டினாள். அவளுக்கு இந்த கவிதையை இன்னாளில் சமர்ப்பிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். கவிதையே அவளைப் பற்றி என்பதால் இது மேலும் மேன்மையும் பெருமையும் பெறுகிறது.
--------------------------------------------------------------------------------------
Marriage memoir
There was a certain phase in my life long ago
It was full of grief without any glow;
You came in to life out of the blue
Capped as a creep over me have been for a long
Your beaming smile can swab tear; ears you lend to listen my fear
Blaze as light while I grope in the dark,
Few words enliven the day; keeps my worries at bay
What could be life in your absence? Can I make my presence?

When everyone thought my life has gone for toss
Your aroma of love that flew through my corpse
That made all guess, although they were farce
Be with me for this life all along and hold my hands strong
Holding hands all through life, I don’t call you just wife
We live with full of cheers; of course, with some tears

Monday, December 19, 2016
ஆண்டாள் - ஆயிஷா - மார்கழி
ஆண்டாள் - ஆயிஷா - மார்கழி (1)
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராட போதுவீர் போதுமினோ - நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வசிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில் தூங்கிக் கொண்டிருந்த
என்னை நான் தங்கியிருந்த அன்னை லாட்ஜ் வாட்ச்மேன் டேவிட்டின் குரல் எழுப்பியது.
''32...32....32''
எழும்பி வந்து பார்த்தேன்.
''ஒங்களை பார்க்க ஒரு பொம்பள வந்திருக்கு''
வேகமாக கீழே இறங்கி வந்து பார்த்த போது ஆயிஷா மதினி ஆட்டோவில் அமர்ந்திருந்தாள். மார்கழி பௌர்ணமி வெளிச்சத்தில் கருப்பு துப்பட்டாவில் ஒளிந்திருந்த மதினியின் முகம் கறையற்ற நிலவாக பிரகாசித்தது.
'என்ன மதினி...ஏதாவது அவசரமா...நீங்க போயி இங்க..அதுவும் இந்த நேரத்தில.'' என்று பதட்டத்துடன் கேட்டேன்.
''ஒண்ணுமில்ல...நாளைக்கி அவுக வாராக...12 மணிக்கு திருவனந்தபுரம் வந்துருவாகலாம்...ஜோஸ் வீட்டுக்கு இப்பதான் போன் வந்துச்சு....வீட்டுக்கு வர சாயங்காலமாயிடும்...காலைல நீ கொஞ்சம் வீடு வரைக்கும் வாரியா... மேலேயிருந்து கொஞ்சம் சாமானை எடுக்கணும்''
சொல்லும்போதே மதினியின் கண்களில் காதலனுக்காக காத்திருக்கும் காதலியின் துடிப்பும் பரபரப்பும் நிரம்பியிருந்தது.
''நீங்க போங்க மதினி...நான் காலைல வர்றேன்'' என்றேன்.
நண்பர் ஹக்கீம் பாயின் மனைவியான ஆயிஷா மதினி அறிமுகமானது 99ஆம் ஆண்டின் துவக்கத்தில் தான். ஒரு மருத்துவ விற்பனை பிரதிநிதியாக நான் நெல்லூரிலிருந்து பணிமாற்றலாகி வந்த நேரம். கிறிஸ்டியன் காலேஜ் ரோட்டில் நண்பர் சங்கரின் ஏவிஎஸ் லைப்ரரியில் தான் ஹக்கீம் பாயை சந்தித்தேன். சங்கர் நூலகத்தோடு மேடை கச்சேரிகளில் ட்ரம்ஸ் வாசிப்பதையும் தொழிலாக வைத்திருந்தார். அந்த குழுவில் ஹக்கீம் பி.பி. ஸ்ரீனிவாஸ் குரலில் பாடுவார். அவர் மேடையில் பாடும் ''நிலவே என்னிடம் நெருங்காதே'', ''நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'' போன்ற பாடல்களை ரசிக்க நாகர்கோவிலில் ஒரு ரசிகர் கூட்டமே இருந்தது. சங்கரின் இசைக்குழுவின் பாடகி லீமாஜோசுடன் அவர் இணைந்து பாடும் ''செந்தூர் முருகன் கோவிலிலே...ஒரு சேதியை நான் கேட்டேன்... கேட்டேன்'' என்ற பாடல் மேடையில் இசைக்கப்படும் பொழுது பாடலின் இடையே ஒரு மந்திர ஸ்தாயியில் ஹக்கிம் பாய் '' நாளை வருவான் நாயகன் என்று நல்லோர்கள் சொன்னாரடி'' என்று இணையும் போது கைத்தட்டு அள்ளும் என்று சங்கர் அடிக்கடி சொல்லுவார். சிலவேளைகளில் நூலகத்திலேயே ஹக்கிம் பாய் பாடிக்காட்டுவார். ஆனால் நிலையான வருமானமோ அல்லது அதில் வரும் வருமானம் போதாததாலோ தேங்காய் பட்டிணத்தில் இருந்த பூர்வீக வீட்டை அடமானம் வைத்து அரபு நாடுகளில் கட்டிடம் கட்டும் கூலித்தொழிலாளியாகப் போனார். அவ்வாறு சென்று விடுமுறைக்காக திரும்பிய தருணத்தில் தான் நான் அவரை சந்தித்தேன். அறிமுகமான சில மணித்துளிகளில் தனது வசீகர புன்னகையாலும் குளிர்ந்த வார்த்தைகளாலும் நெஞ்சுக்கு நெருக்கமானார்.
''தம்பி...இங்க பாருங்க காலுல ஏதோ கரையான் மாதிரி வந்து அரிச்சிக்கிட்டே இருக்கு....இந்தவாட்டி மெடிக்கலு பிரச்சினை ஆயிடுமோன்னு பேடிச்சு வருது...நீங்க கொஞ்சம் பாருங்க...''
ஹக்கீம் பாய் என் நுனிநாக்கு ஆங்கிலத்தையும் டை கட்டிய தோற்றத்தையும் பார்த்து மருத்துவர் என்று முடிவு செய்து விட்டார்.
''ஐய்யயோ...பாய் நான் ஒரு சாதாரண மெடிக்கல் ரெப்ரசண்டேட்டிவ்...டாக்டர் இல்லை... இருந்தாலும் என்னால் ஓரளவுக்கு ஊகிக்க முடியும்…எங்கே காட்டுங்க பார்ப்போம்'' என்றேன்.
தனது பேண்டை மடித்து காட்டினார். நன்கு சிவந்த பாதங்களில் ஆங்காங்கே மரப்பட்டை போன்று திட்டுக்கள்.
''பாய்..இது சாதாரண எக்சீமா தான்...பயப்பட வேண்டியதில்ல...நான் மருந்து தாரேன்....''
''எங்கே தாம்சம்?'' என்றார் குமரித்தமிழில்.
''இங்கே தான் அன்னை லாட்ஜ்ல...டதி ஸ்கூல் ஜங்சன்''
நாகர்கோவில் கோர்ட் ரோடில் டத்தி ஸ்கூலுக்கு எதிரில் வசந்தம் மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் அன்னை லாட்ஜ் பிரம்மச்சாரிகளின் சொர்க்கம். குடும்பத்தை விட்டு தனியே வாடும் வாலிப வயோதிக அன்பர்களின் புகலிடம். அங்கிருந்து கலெக்டர் ஆபிஸ் போக டத்தி ஸ்கூலுக்கு ஒட்டி ஏறுமுகமாக செல்லும் சாலையில் நடந்தே சென்று விடலாம்.
''நம்ம வீடு இங்க தான் ராமவர்மாபுரம்...ஏல சங்கரு..நாளைக்கு தம்பிய கூட்டிட்டு வீட்டுக்கு வாலே...''என்றார்.
''கண்டிப்பா...நீரு வீட்ல சொல்லி தேத்தண்ணி ஏற்பாடு பண்ணும்'' என்றார் சங்கர்.
மறுநாள் நானும் சங்கரும் ராமவர்மாபுரம் சென்றோம். கலெக்டர் ஆபிசுக்கு எதிரே இருக்கும் ரஜே ஆஸ்பத்திரிக்கு அருகே உள்ள குறுகலான சாலையின் வழியே ராமவர்மாபுரத்தை எளிதில் அடையலாம். எழுத்தாளர் சுந்தர ராமசாமி வீட்டிற்கு பின்புறம் தான் ராமவர்மாபுரம்.. குறுக்கும் நெடுக்குமாக மிகக் குறுகலான அந்த பிராந்தியத்தினுள்ளே நுழைந்து சரியாக வெளியே வருவது நாகர்கோயிலின் மண்ணின் மைந்தர்களுக்கு மட்டுமே கைவந்த கலை. சின்னஞ்சிறிய சந்துகளால் ஆன பகுதி அது. சங்கர் தனது பைக்கை ஒரு மூலையில் நிறுத்தி விட்டு ''ஜேசீ...அந்த கடைசி வீட்டு பெல்லை அடிச்சி பாயை எழுப்புங்க...'' என்றார்.
அந்த பிராந்தியத்தில் வாகனத்தை நிறுத்துவது பிரம்மபிரயத்தனமான செயல். சங்கர் ரொம்ப கஷ்டப்பட்டார். நான் அழைப்புமணியை அழுத்தினேன். கதவு திறந்தது அச்சு அசலாக இந்தி நடிகை மீனாகுமாரி உயிர்பெற்று வந்தது போன்ற ஒரு பேரழகு முகம் தென்பட்டது.
ஆயிசா மதினியின் போட்டோவையும் மீனாகுமாரியின் போட்டோவையும் அருகருகே வைத்து யாரேனும் ஆறு வித்தியாசம் கண்டுபிடித்து சொன்னால் அவர்களுக்கு சென்னைக்கு மிக அருகாமையில் பெங்களூருக்கு பக்கத்தில் அரை கிரவுண்டு இடம் இலவசமாக தருவேன். பரவசத்தில் வார்த்தை வராமல் 'ஙே'' என்று விழித்துக்கொண்டிருந்தேன். சங்கரும் வரவில்லை...அவர் வண்டியோடு போராடிக்கொண்டிருந்தார்.
''யாரு வேணும்?'' மென்மையான குரல்.
''ஹக்கீம் பாய் வீடு....'' என்று இழுத்தேன்.
மின்னலடிக்கும் புன்னகையுடன் ''உள்ள வாங்க'' என்றார்.
''ஏங்க...உங்களைத்தேடி ஆளுக வந்திருக்காக...''
குளித்து தலை துவட்டியபடி மேலாடை இன்றி லுங்கியுடன் ஹக்கீம் பாய் வந்தார்.
''அடடே...வாங்க தம்பி...சங்கரு எங்கே...அவன் வரல?''
''இல்லை பாய்..அவரு வண்டியை பார்க் பன்ண முடியல...அங்கே சந்துகிட்ட போராடிக்கிட்டு இருக்காரு''
''அது ஒரு பிரச்சினை தம்பி. இந்த ஏரியாவுல... வண்டிய ரஜே ஆஸ்பத்திரிக்கிட்ட நிறுத்திட்டு நடந்துவர வேண்டியது தானே...ஏய் ஆயிஷா தம்பிக்கு தேத்தண்ணி போடு...சீக்கிரம்''
''பாய்...இந்த மருந்து போட்டு பாருங்க...நல்லாருக்கும்'' என்று என்னிடம் இருந்த ''Elocon Lotion'' குப்பிகளை கொடுத்தேன்.
'இது களிம்பு மாதிரி இல்லையே....இத என்ன செய்றது தம்பி''
''வீட்டில் டெட்டாலும் பஞ்சும் இருந்தா கொடுங்க பாய்''
''ஏய்...ஆயிஷா...தம்பி ஏதோ கேக்குறான் பாரு''
டெட்டாலும் பஞ்சும் வர '' இங்கே உக்காந்து காலை காட்டுங்க'' என்றேன்.
நானே அவரது பாதங்களை சுத்தம் செய்து எவ்வாறு மருந்திட வேண்டும் என்று காட்டினேன்.
''ரொம்ப நன்றி தம்பி...எங்கே மத்தவனைக் காணோம்...இன்னுமா வண்டிய நிறுத்துறான்..ம்ம்''
''பாய்..கை கழுவணுமே...கொஞ்சம் சோப் கிடைக்குமா...''
''ஏய்...ஆயிஷா...தம்பிக்கு பாத்ரூமை காட்டு...உள்ளே போங்க தம்பி''
இன்னொருவர் வீட்டு குளியலறைக்குள் நுழைவது போன்ற பாவகாரியம் வேறெதும் இல்லை என்று நம்பும் ஜீவராசி நான்.
அங்கு எதுவேண்டுமானாலும் இருக்கும். இருப்பினும் ஒரு சங்கோஜத்துடன் சென்றேன். அடுக்களைக்கு எதிரில் தான் இருந்தது பாத்ரூம்.
'''சும்மா உள்ள போங்க''என்றார் ஆயிஷா.
அவ்வளவு சுத்தமான குளியலறையை நான் அதுவரை பார்த்ததில்லை. சுவற்றில் கறையில்லை. தேவையற்ற ஆடைகள் இல்லை. இருந்த பொருள்கள் சோப்பு, ஷாம்பு அனைத்திலும் ஒரு ஒழுங்கு இருந்தது. அறை எங்கும் பழைய சிந்தால் சோப் வாசனை.
வீட்டில் நுழையும் போதே கவனித்தேன். செருப்புக்கள் மிக நேர்த்தியாக வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. குழந்தைகளின் யூனிஃஃபார்ம் ஷூக்கள் கூட மிக ஒழுங்காக வைக்கப்பட்டிருந்தன. அடுப்படி மிக சுத்தமாய் இருக்க அந்த சிறிய வீட்டின் ஒட்டுமொத்த நேர்த்தி ஒருவித பயத்தையே உண்டுபண்னியது.
''ரொம்ப தாங்க்ஸ்ங்க'' என்றேன்.
சிரித்துக் கொண்டே ''எதுக்கு?'' என்றார்.
பதில் சொல்லாமல் நின்றேன்.
''ஒங்காளுகல்ல அண்ணன் பொண்டாட்டிய எப்பிடி கூப்புடுவீங்க?''
''மதினி...அண்ணி...அத்தாச்சி...இப்படி ஏதாவது ஒண்ணு''
''என்னைய மதினின்னே கூப்பிடு''
பழகிய பத்து நிமிடத்தில் உரிமையாய் உரையாடத் துவங்கினாள்.
தேநீர் வரவும் சங்கர் வரவும் சரியாய் இருந்தது. தேயிலையும் பாலும் அளவிடற்கரிய அன்பும் கலந்த பானத்தை சுவைப்பது அற்புதமாக இருந்தது. அடுத்த சில வாரங்களில் நான் அவர்களது குடும்பத்தில் ஒருவனானேன். அவர்கள் குடும்பத்தில் யாருக்கேனும் தலைவலித்தாலும் வயிறு வலித்தாலும் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் என்னிடம் ஒரு வார்த்தை கேட்ட பின்பே மருத்துவரை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. மருத்துவரை நானே பரிந்துரைக்கும் நிலைக்கு உயர்ந்தேன்.
யாரிடம் அறிமுகப்படுத்தினாலும் உறவு முறையோடு மட்டுமே அறிமுகம் செய்வாள். சுன்னத் என்னும் மார்க்க கல்யாணம், நிக்காஹ் என்னும் திருமண அழைப்பிதழ்கள் தக்கலை, மார்த்தாண்டம், மிடாலம், குலசேகரம், பூதப்பாண்டி என்று அனைத்து சுற்று வட்டாரங்களிலிருந்தும் வந்து குவிந்தன. அனைவரும் உரிமையோடு மாப்பிள்ளை என்றும், தம்பி என்றும் அழைக்க ஆயிசாவோட கொழுந்தன் என்றும் பெயர் பெற்றேன்.
ஆண்டாள் - ஆயிஷா - மார்கழி (2)
காலையில் வீட்டிற்கு சென்ற போது மதினி வீட்டையே தலைகீழாக மாற்றியிருந்தாள்.
''மேல ஒரு புது மெத்தை இருக்கு...அத இறக்கி தர்றியா...இதுல ஜீனத் மூத்திரம் பேஞ்சு நாறிப்போயி கிடக்கு''
முக்காலி மீது ஏறி பரண் மேல் அமர்ந்தேன். சாமான்களை விலக்கி உள்ளே மடித்து வைக்கப்பட்டிருந்த மெத்தையை இறக்கினேன்.
அதிலிருந்து வெளிப்பட்ட டெலிவரி சலான் தேதி இரண்டாண்டுகளுக்கு முன்னால் எனக் காட்டியது.
''மதினி...ரெண்டு வருசமாவா மேலே போட்டு வச்சிருந்தீங்க...?''
''அத ஏன் கேக்குற...போனவாட்டி வந்தப்ப ஒரு நாள் கூட அந்த மனுசன் வீட்டுல தங்கல...ஆஸ்பத்திரியே கதின்னு கிடந்தாரு''
''ஏன் மதினி...என்னாச்சு...?''
''வீட்டுக்குள்ள நுழஞ்ச மனுசன் குளிச்சிட்டு சரியாக்கூட சாப்பிடல...பணத்தை தூக்கிக்கிட்டு திருநெல்வேலிக்கு இக்பாலோட போய்ட்டாரு...அவங்க பூர்வீக வீட்டை அடமானம் வச்சுத்தான் அவரு அரேபியாவுக்கு போனது...வந்தவுடனேயே அதை மீட்டு அவங்க வாப்பா கையில கொடுக்கணும்னு கிளம்பி போயிட்டு வரும் போது ஒரே வவுத்தவலினு துடிச்சிட்டாரு...அப்புறம் மத்தியாஸ் ஆஸ்பத்திரிக்கு போயி ரூபன் டாக்டரை பார்த்தோம்...அவரு உடனே குடல்வால் ஆபரேசன் செய்யணும்...இல்லைனா பொழைக்க மாட்டாரு அப்படின்னு சொல்லிட்டாரு.. இந்தமுறை அவங்களுக்கு இருந்த 30 தென்னை உள்ள தோப்பை அடமானம் வச்சு ஆபரேசன், ஆஸ்பத்திரின்னு செலவு செஞ்சோம்....ஒங்கிட்ட சொல்றதுக்கு என்னப்பா...ரெண்டு வருசம் கழிச்சு வந்த அந்த மனுசன் ஒரு நாள் கூட சந்தோசமாயில்ல...''
''விடுங்க மதினி...மனுசன் நல்லாயிருந்தா எவ்வளவு வேணும்னாலும் சம்பாதிச்சடலாம்...ஒடம்பு முக்கியம்ல மதினி''
மெத்தையை மாற்றி போட்டுவிட்டு செட்டிகுளம் ஜங்க்சனிலிருந்து கறி வாங்கி கொடுத்துவிட்டு கிளம்பும் வேளையில் மீண்டும் மதினி அழைத்தாள்.
''டவர் ஜங்சன் பக்கம் உனக்கு வேலை இருக்காப்பா?''
''ஏன் மதினி...எதுவும் வேணுமா?
''நம்ம ரஷீத் கடையில துணி கொடுத்திருக்கேன்...வாங்கிட்டு வந்துர்றியா?''
''நான் இப்போ உமர் டாக்டரை பார்க்க போவேன்...வரும் போது வாங்கிட்டு வந்துர்றேன்''
மார்கழி குளிர் குமரி மாவட்டத்தை அந்த பகல்வேளையைக் கூட ரம்மியமாக்கியிருந்தது.
டாக்டர் உமர் புகழ்பெற்ற காது,மூக்கு, தொண்டை நிபுணர். டவர் ஜங்க்சனிலிருந்து நேரே சென்றால் கட்டபொம்மன் ஜங்க்சன் அதன் அருகில் பெரிய மருத்துவமனை வைத்திருந்தார். பார்த்துவிட்டு ரஷீத் கடையில் புகுந்தேன்.
''ஏய்...மாப்ளே...என்ன இந்த பக்கம்...நா பையமாருக்கு தைக்கிறதில்லடே....ஹே...ஹே...ஹே''
''இல்ல மச்சான்...ஆயிஷா மதினி துணி வாங்கிட்டு வரச் சொன்னாங்க...அதுதான் வந்தேன்''
''ஏடே...மத்தவன் ஊருலருந்து வர்றானா?''
''ஆமா மச்சான்... ஹக்கிம் பாய் மதியம் வர்றாரு...''
''அவன் வந்தாம்னா ஒன் மதினியாளுக்கு இது அவசியமே இருக்காதுடே...ஹே...ஹே...ஹே''
பேசிக்கொண்டே உயரம் குறைத்து தைக்கப்பட்ட மூன்று உள்பாவாடைகளை செய்தித்தாளில் மடித்து கொடுத்தார்.
அவருடைய பேச்சை நான் ரசிக்கவில்லை என்பதை உணர்ந்த ரஷீத் ''மாப்ளே...கோவிச்சிக்காதீரும்...நம்மள மாதிரி வயசு புள்ளைக அப்படித்தான் பேசிக்கணும்...ஹே...ஹே...ஹே''
நான் முறைத்தேன். அதற்குள் தேனீர் வரவழைத்திருந்தார் ரஷீத் மச்சான். எப்போது தேனீர் சொன்னார் என்று தெரியாது. ரஷீத் மச்சான் ஒரு பெரிய கேளிக்கை பேர்வழி. வரைமுறையில்லாமல் அனைவரையும் கிண்டல் செய்வார். ஆனால் யாரும் கோவித்துக்கொள்ள மாட்டார்கள்.
''ஒமக்கும் எனக்கும் ஒரே வயசா...ம்ம்...ஒம்பேரன் வயசு எனக்கு ஞாபகத்தில வையும்...''
வீட்டிற்கு வரும் போது ராஜன் நாடார் நின்று கொண்டிருந்தார். ஒரு காலத்தில் மரக்கடை, இசைக்குழு என்று வாழ்ந்து பின்பு சகவாசத்தினால் கெட்டு நிற்கும் வினோத பிறவி. ராஜன் நாடார் இப்போதெல்லாம் செட்டிக்குளம் ஜங்க்சனில் சக்ரவர்த்தி தியேட்டருக்கு எதிரில் உள்ள இரும்புக்கடையில் அமர்ந்து தேச விசாரணையில் மட்டும் ஈடுபடுவார். மற்றபடி அவருடைய செயல்பாடுகள் ஒன்றும் சொல்றமாதிரியெல்லாம் இல்லை. மகன்கள் நல்ல அரசு வேலைகளில் இருப்பதால் சாப்பாடிற்கு கவலை இல்லை. ஹக்கிம் பாய்க்கு இவர் மீது ஒரு தனி மரியாதை. ஆனால் மதினிக்கு இவரை கண்டாலே பிடிக்காது. ஹக்கிம்பாய் அவரை சகலை என்று தான் கூப்பிடுவார். அதனால் எனக்கும் சகலையாகிப் போனார்.
''என்ன அண்ணாச்சி இந்த பக்கம்...?''
''ஏலே...மத்தவன் ஊருல இருந்து இன்னைக்கி வருதாம்னு தாணு சொன்னாம்ல...நெசமா''
''அதுக்குள்ள மூக்குல வேர்த்துருச்சா ஒமக்கு..ம்ம்''
''இல்லடே..போனவாட்டி அவன் கொண்டு வந்த சரக்கை தாணு வாரிக்கிட்டு போய்ட்டாண்டே...இந்த வாட்டி விடுறதாயில்ல...ஆமாம்...''
''அண்ணாச்சி...இதெல்லாம் ஒரு பொழப்பா...ஒமக்கு என்ன கொறச்சல்...பசங்க நல்ல வேலையில இருக்காணுக...கௌரவமா வீட்டோட இருந்தா என்ன..ம்ம்?''
''ஏலே...ஒனக்கு வயசு பத்தாதுடே...நா வாழ்ந்த வாழ்க்கைய...பொழச்ச பொழப்ப ஹக்கிம்ட்ட கேட்டு பாரு...ஏன் ஒன் மதினியாளுக்கிட்ட கூட கேளு...இன்னைக்கி நாதியத்து போனேண்டே...நீங்களெல்லா அறிவுரை சொல்லுதீக...''
''அறிவுரை இல்ல அண்ணாச்சி...வசதியில்லாதவர்னா பரவாயில்ல...பசங்க வசதியா இருந்தும் நீர் இப்படி இருந்தா சங்கடமாயிருக்குல்ல..அதுக்கு சொன்னேன்''
''நீ ஒண்ணும் புடுங்க வேண்டாம்...மத்தவன் வந்தவுடனே எனக்கு வேண்டியதை ஒதுக்கி வை....ஒனக்கு புண்ணியமா போகும்...நான் சக்ரவர்த்தி தியேட்டர்கிட்ட இரும்புக்கடையில தான் ஒக்காந்திருப்பேன்...வந்து கொடுத்துட்டு போயிடு...''
அவர் சென்று விட்டார் என்று உறுதியான மறுநொடியே ஆயிஷா மதினி கதவை திறந்தாள்.
''எத்தனை வாட்டி சொன்னாலும் நீயும் அவரும் திருந்த மாட்டீக''
''இல்ல மதினி...வாழ்ந்து கெட்ட மனுசன்...பாக்க பாவமாயிருக்குல்ல...அதுதான்''
''அந்தாளு ஒரு...'' என்று சொல்லுமுன்பே அந்த குறுகிய சந்தின் வாயிலும் முக்கிய வீதியும் இணையும் இடத்திலிருந்து மூன்று முறை ஹார்ன் ஒலி கேட்டது.
''ஏய்...அவுக வந்துட்டாகடே...போ...போ...போய்ப்பாரு..." மதினி பட்டாம்பூச்சியாய் சிறகடித்து பறந்தாள்.
ஆண்டாள் - ஆயிஷா - மார்கழி (3)
ராமவர்மாபுரத்தில் கார் வரும் போகும் சத்தம் புதிதல்ல. இருப்பினும் மதினி மிகத்துல்லியமாக ஹக்கிம் பாயின் வருகையை உணர்ந்திருந்தாள். அவள் சொன்னது மெத்தச் சரி. வந்தது ஹக்கிம் பாய் தான். பாய்ந்தோடி காரில் இருந்த இரண்டு துணிப்பையையும் அவர் தூக்கிக்கொள்ள நைலான் கயிறு போட்டு கட்டிய இரண்டு பெட்டிகளை நானும் டிரைவரும் ஆளுக்கொன்றாக சுமந்து கொண்டோம்.
ஹக்கிமை பார்த்த மாத்திரத்தில் ஆயிஷா மதினி கண்களில் காதலும் காமமும் கருணையும் சரிவிகித சமானமாக பிரவாகம் எடுத்தன. நாங்கள் இருந்ததால் கண்களாலேயே அவற்றை ஹக்கிம் பாய்க்கு பரிமாறினாள். ஹக்கிம் பாயும் மிக நுட்பமாக அதற்கு பதில் தெரிவித்தார்.
''புள்ளைகளை எங்கே காணோம்?''
நானும் அப்போது தான் கவனித்தேன். பிள்ளைகளைக் காணோம்.
''இக்பால் வீட்டுல எல்லோரும் சினிமாவுக்கு போனாக ...நாந்தான் அனுப்பி வச்சேன்''
''பகல்ல எதுக்குடி சினிமா?''
''இல்ல...அது வந்து....அதுகளுக்கும் பொழுதுபோகனும்ல...!'' மதினி இழுத்தாள்.
ஹக்கிம் புரிந்து கொண்டார்.
''குளிக்கிறீகளா...தேத்தண்ணி போடட்டா''
''ஒரு நிமிசம் பொறு....தம்பி...சகலை வந்தாரா?''
''இப்போ எதுக்கு அவரை கேக்குறீக'' மதினி பதறினாள்.
ஹக்கிம் அதை கண்டுகொள்ளாமல் ''அதுல ரெண்டு ஜேபி ஸ்காட்ச் இருக்கு...ஒண்ண சகலைகிட்டயும் ஒண்ண சங்கர்ட்டயும் கொடுத்துர்றியா?''
பெட்டியை திறந்து எடுக்குமுன் ஹக்கிம் குளிக்க சென்றிருந்தார். ஏர்போர்ட் செக்கிங் முடித்த அடையாளங்களும் அதை சுற்றியிருந்த பாலித்தீன் ராப்பர்களையும் களைந்து எடுப்பதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. வீடு முழுவதும் குப்பை. மதினிக்கு பிடிக்காத விசயம் குப்பை. பொறுமையாக எடுத்து வீட்டிற்கு வெளியே எறிந்தேன். எறிந்து விட்டு திரும்பி வீட்டிற்குள் நுழையும் வேளை மதினி கண்களாலேயே என்னை அழைத்தாள். காதோரம் மெதுவாக கிசுகிசுத்தாள்.
''இந்த கருமத்தை கொண்டு போய் கொடுத்துட்டு நீ லாட்ஜுக்கு போய்டு...நாளைக்கு பகல்ல சாப்பிட இங்கே வந்துடு...மதினி பிரியாணி செய்யப்போறேன்''
''சரி மதினி...ஆனா நாளைக்கு வரமுடியாது...ஜெயசேகரன் ஹாஸ்பிடல் போகணும்,,,நீங்க பாயை கவனியுங்க'' எனக்கு மதினி மாதிரி கிசுகிசுக்க முடியாத கணமான குரல்.
''ஏன் வரமுடியாதுங்குறான்..என்னவாம்?'' குளித்து முடித்த ஹக்கிம் தலையை துவட்டியபடியே வந்தார். மதினி கண்களால் ஜாடை செய்தாள்.
''அது ஒண்ணுமில்ல பாய்...நாளைக்கு பிரியாணி செய்றாகளாம்...சாப்பிட வரச்சொல்லுறாக..."
''ஆஹான்...ஏன் அதிலென்ன பிரச்சினை?''
''இல்ல பாய்...நாளைக்கு ஜெயசேகரன் ஹாஸ்பிடல்ல வேலை...டாக்டர் ரஞ்சித் அப்புறம் டாக்டர், சாபு இவங்களை பாக்குறதுக்குள்ள 4மணிக்கு மேல ஆயிடும்..அது தான்.. இவங்க ரெண்டு பேருக்கிட்டயும் அப்பாயிண்மெண்ட் கிடைக்கிறதே கஷ்டம் பாய்...!.''
''சரி...அப்போ காலையில வந்துடு...உங்கிட்ட் கொஞ்சம் விவரம் கேக்கணும்''
''சரி...பாய் நான் காலையில வர்றேன்...'' என்று இரண்டு பாட்டில்களை எடுக்கும் போது ரஷீத் மச்சான் செய்தித்தாளில் சுற்றியிருந்த துணி உருண்டை கீழே விழுந்தது.
''என்னது அது?'' என்று ஹக்கிம் பாய் கேட்க, ஜாக்கெட் என்று நானும் உள்பாவாடை என்று மதினியும் சொல்ல பாய் எங்கள் இருவரையும் குழப்பத்துடன் பார்த்தார்.
''ஏண்டி...இந்த வேலையெல்லாமா இவனை செய்யச் சொல்லிக்கிட்ருக்க...ம்ம்''
''இல்லை உமர் டாக்டரை பாக்க போறேன்னு சொன்னான். அதனால அப்படியே ரஷீது கடையில உயரம் கம்மி பண்ணச்சொன்னத வாங்கியாரச் சொன்னேன்...வேறொன்னுமில்ல..!
பாய் இருவரையும் முறைத்தார்.
நான் பதில் பேசாமல் வீட்டை விட்டு வெளியே வந்தேன்.
மார்கழி மாதம் அந்த மாலைவேளையில் நகரத்தை குளிராலும் மென்மையான இருளாலும் போர்த்தியிருந்தது. சந்து திரும்பி நிலா வெளிச்சத்தில் கே.பி ரோட்டில் ஹைமாவதி ரஜே ஆஸ்பத்திரிக்கருகில் நிறுத்தி வைக்கப்பட்ட எனது டிவிஎஸ் சாம்ப் வண்டி அருகில் வரும் போது தான் உரைத்தது. வண்டி சாவி எங்கே? மீண்டும் நடந்தேன். அதற்குள் வீட்டின் விளக்குகள் அணைக்கப்பட்டு பக்கவாட்டு படுக்கையறையின் சன்னல் வழியே நீலநிற இரவு விளக்கின் வெளிச்சம் வெள்ளைநிற திரைச்சீலை தாண்டி காம்பவுண்ட் சுவரை வண்ணமயமாக்கியிருந்தது.
அறையிலிருந்து கொலுசின் சிணுங்கல் விடாமல் ஒலித்துக் கொண்டிருக்க ஸ்தம்பித்துப் போன நான் கதவை தட்டுவதா அல்லது மணியை அழுத்துவதா என்ற குழப்பத்தில் தயங்கியபடியே நின்றேன்.
ஏதாவது செய்து விட வேண்டும் ஆனால் அது அவர்களை பதட்டமடைய வைத்துவிடக் கூடாது என்பதில் கவனமாயிருந்தேன்.
அந்த சந்தில் அதுவே கடைசி வீடு. அந்த பிராந்தியமே மௌனத்தில் ஆழ்ந்திருந்தது. மெதுவாக அந்த மௌனத்தை கலைத்தது மதினியின் மென்மையான குரல் சற்றே அழுத்தமாக அறையிலிருந்து ''இது என்ன புதுப் பழக்கம்?''
சரி..இனி பொறுப்பதில்லை என்று கதவை தட்டினேன்.
சில நிமிடங்கள் மௌனத்திற்கு பின் கதவிற்கு பின்னாலிருந்து ''யாரது'' என்னும் குரல். ''நான் தான் பாய்...வண்டி சாவி டிவி மேலே இருக்கு...கொஞ்சம் எடுத்து தர்றீகளா?''
ஒரு பக்கமாக திறந்த கதவின் இடுக்கில் இருந்து ஒரு கை வெளிப்பட்டு சாவியும் குரலும் மட்டும் வந்தது..''காலையில வந்துருடே''
''தாங்க்ஸ் பாய்''
மார்கழி பௌர்ணமிக்கு மறுநாள் நிலவின் அளவிலோ ஒளியிலோ பெரிய வேறுபாடு இல்லை. சாலை விளக்குகள் எதுவும் எரியவில்லை. ஹைமாவதி ரஜே க்ளினிக் வரைக்கும் இரவின் இருளை நிலவொளி தின்று கொண்டிருந்தது. வழக்கத்திற்கு மாறாக போக்குவரத்து வெகுவாக குறைந்திருந்தது. மெல்லிய காற்று வருட இலைகள் மரத்தின் கிளைகளோடு மௌனமொழியில் பேசிக்கொண்டிருந்தன.
எனது காதோரம் யாரோ கிசுகிசு குரலில் பேசுவது போன்ற பிரமை '' என்ன இது புதுப்பழக்கம்''. அது என்ன? குழப்பத்திற்கு மாறாக எனக்கு அடக்க முடியாத சிரிப்பு தான் வந்தது.
ஆண்டாள் - ஆயிஷா - மார்கழி (4)
மறுநாள் காலை வெட்டூர்ணிமடத்தில் இருக்கும் ஒவன் ட்ரஸ்ட் நூலகத்தில் எனது ஃப்ரென்ச் வகுப்பை முடித்துக் கொண்டு ஹக்கிம் பாய் வீட்டிற்கு சென்றேன்.
இடியாப்பமும் பாலும் காலை உணவாக பரிமாறப்பட்டது. பாலில் மிக நேர்த்தியாக வெட்டப்பட்ட வாழைப்பழம், பேரிச்சம் பழம். கிஸ்மிஸ் பழம், முந்திரிபருப்பு என்று மதினி வெறுமனே காய்ச்சிய பசும்பாலை பிரம்மாண்டமாக்கியிருந்தாள். ஹக்கிமுக்கு பரிமாறும் போது கண்களில் காமமும் காதலும் வடியும். எனக்கு பரிமாறும் போது அன்பும் அருளும் நிரம்பி வழியும். மதினி ஸ்கை ப்ளூ நிறத்தில் நைட்டியும் அதற்கு எதிரான அடர்நீலவண்ண துப்பட்டாவால் தலையிலிருந்து கழுத்து வழியாக மார்பு வரை போர்த்தியிருந்தாள். மதினியின் முகம் நித்ய பௌர்ணமி அதற்கு மேலும் மெருகூட்டியது அந்த அடர் நீல வண்ண துப்பட்டா. சற்று உன்னிப்பாக கவனித்தேன். எளிதில் யாரும் கண்டுகொள்ள முடியாதபடி மெல்லிய ரோஜா நிறத்தில் உதட்டு சாயம் பூசியிருந்தாள். அன்று நான் கண்டது அது நாள் வரை பார்த்திராத முகம். மகிழ்ச்சியும் நிறைவும் கனிந்த ஒரு தோற்றம். அந்த சூழலின் தன்மைக்கு சற்றும் பொருத்தமில்லாமல் காதுகளில் மென்மையான குரல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது. ''இது என்ன புது பழக்கம்?''
இனி தாமதிக்கக் கூடாது. உடனடியாக கிளம்ப வேண்டும். கிளம்ப எத்தனித்த போது ஹக்கிம் பாய் நிறுத்தினார்.
''இந்த தடவை ஒரு வாரம் தான் லீவு...ஆமா...ஏஜெண்ட் வேற ஆளு...ஒடனே கிளம்பணும்..மெடிக்கலு புதுசா பண்ணனும்....கால்ல இந்த கரையானுக்கு நீ கொடுத்த மருந்து நல்லா இருந்தது...ஆனா நான்தான் தொடர்ந்து போடாம விட்டுட்டேன்...நீ நம்ம கோட்டாறு ஆஸ்பத்திரில ஒனக்கு தெரிஞ்ச டாக்டர்மாருகிட்ட சொல்லி சர்டிபிகேட் வாங்கித்தரணும்''
சமையற்கட்டுக்கு அருகில் தலையை குனிந்தவாரு மதினி நின்று கொண்டிருந்தாள்.
''அதுக்கென்ன பாய்...ஒண்ணும் பிரச்சினை இல்ல...டாக்டர்.பிரவீன் நம்மாளு தான்...வாங்கிடலாம்...நான் நாளைக்கி கூட்டிட்டு போறேன்''
அனைத்தும் நல்லபடியாய் முடிந்து ஹக்கிம் விமானம் ஏறினார். மதினி பழைய தோற்றத்திற்கு திரும்பினாள்.
மார்கழியில் சனிக்கிழமை மாலை மது அருந்துவது ஒரு நல்ல பழக்கமாக இருந்தது அன்று. டத்தி ஸ்கூல் ஜங்சனுக்கு எதிரில் இருக்கும் போலிஸ் ஸ்டேசனுக்கு அருகாமையிலேயே அந்த மதுக்கடை இருந்தது.
நானும் நண்பர் ராமகிருஷ்ணனும் அங்கே ஐக்கியமானோம். ஹக்கிம் பாயின் உறவினர்களும் தேங்காய்பட்டிணத்தை சேர்ந்தவர்களுமான
நசீரும் யாசினும் அங்கே தென்பட்டார்கள்.
''ஏய்...மாப்ளே...மத்தவனுக்கு என்ன நடந்துச்சு தெரியுமாடே...?'' என்றனர்.
நான் குழப்பத்துடன் ''யார்...யாருக்கு என்ன ஆச்சு?'' என்றேன் புரியாமல்
''போன வாரம் போனானே ஹக்கிமு...கட்டிடம் இடிந்து விழுந்து ஸ்பாட்லயே மௌத்தாயிட்டானாம்...தெரியாதா...?''
மது அருந்தாமலே மயக்கம் வந்தது. ஒட்டுமொத்த மதுக்கூடமே சுற்றியது. நான் ஒரு வாரம் ஊரில் இல்லை. அலுவலக விசயமாக சென்னை சென்றிருந்தேன். ஒருவாரம் தானே ஆச்சு...அதற்குள்ளாகவா...ஐயய்யோ...மதினி...!
வாங்கிய மதுக்குப்பியை திருப்பிக் கொடுத்துவிட்டு ஓடினேன். வீடு இருட்டடைந்து இருந்தது. கதவை தட்டலாமா...மணியை அழுத்தலாமா...இரண்டுமே செய்தேன். இளையவள் ஜீனத் கதவை திறந்தாள். மரணம் குறித்தோ அது ஏற்படுத்தும் வாழ்வியல் வெற்றிடம் குறித்தோ புரிந்து கொள்ளமுடியாத வயசு ஜீனத்திற்கு.
உள்ளே மூத்தவள் பர்வீன் மடியில் படுத்திருக்க மதினி விட்டத்தை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். நான் தான் ட்யூப் லைட்டை போட்டேன். திடுக்கிட்டு விழித்தவள் என்னைக் கண்டு வீறிட்டு அழுதாள்.
''இதுக்கா...இதுக்குதானா..என்னை படைச்சே ரப்பே.....வந்தாகளே மனுசன்...எதுக்கு..அவுக முகத்தை கடைசியா காமிச்சிட்டு போகத்தானா...அன்னைக்கி ராத்திரி கூட ''ஆயிஷா...மார்க்கத்துல மறுபிறப்புக்கு இடமில்ல...ஆனா...நான் இன்னும் பத்து பிறப்பு எடுக்கணும்னுடி உங்கூட வாழ்றதுக்குன்னாரே....கோவப்பட்டேன்...ஆனா எங்கே மொகம் கோணிருமோன்னு என்ன இது புது பழக்கம்னேன்....ஒரு பிறப்பைக்கூட முழுசா அனுபவிக்காம இப்பிடி போய்ட்டாரே...எங்களை அனாதியாக்கிட்டு போய்ட்டாரே...இந்த பெண்டு புள்ளைகளை வச்சிக்கிட்டு நா என்னத்த செய்வேன்...!
முதல்முறையாக ஆயிஷா மதினியை தொட்டேன்.
''எப்போ...என்ன ஆச்சு''
பதில் சொல்லாமல் என் தோள்களில் சாய்ந்து அழுதாள்...அடக்க முடியாத அழுகை…பேச்சு வரவில்லை…என்னென்னவோ உளறினாள்.
இறுதியாக ஒரு பெருமூச்சை இழுத்து விட்டபடி ''எனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் செய்வியா...அந்த மய்யத்தை (உடலை) மட்டும் இங்கே கொண்டு வந்துடு...அந்த மனுசன் உடம்பை ஒரு தடவை தொட்டுப்பாக்கணும்..கஷ்டம்ங்கறாங்க''
''நான் பண்றேன் மதினி...நான் பண்றேன்....''
மருத்துவ விற்பனை பிரதிநிதி சங்கத்தின் வாயிலாக குமரி மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் மோகனை தொடர்பு கொண்டு தூதரக நடவடிக்கை மேற்கொண்டோம். ஹக்கிம் பாயோடு சேர்ந்து 12 தொழிலாளிகள் இந்தியர், பங்களாதேசி, பாகிஸ்தானி, இரானி என சகலவிதமானவர்களும் அந்த உயரமான கட்டிடத்தின் பக்கச்சுவர் சரிந்து விழுந்து அகால மரணமடைந்தனர் என்றும் உடல்கள் மிகமோசமாக சிதைந்து விட்டன என்றும் உத்தேசமான உடல் தான் கிடைக்கும் என்றும் அங்கேயே அடக்கம் செய்வது நல்லது என்று தகவல் வந்தது.
மதினி நொறுங்கிப் போனாள்.
''நான் என்னத்தை பண்ணுவேன்...ச்சீ என்ன ஒடம்பு இது...என்ன உசிரு இது...இதையெல்லாம் கேட்டுட்டு இன்னும் சாகாம...ச்சே...அன்னைக்கி நீ வந்திட்டு போனதும் வயிறு பசிச்சதய்யா...ஒவ்வொரு முறை குளிக்கும் போதும் அவுக தொடுற மாதிரியே இருக்குய்யா...நான் இன்னும் ஏன் உசுரோட இருக்கேன்...இந்த ஒடம்பு எதுக்கு...இந்த உசுருதான் எதுக்கு!''
என்ன பதில் அவளுக்கு ஆறுதல் தரமுடியும் என்று தெரியாததால் இதற்கு எதுவும் பதில் சொல்லாமல் ''புள்ளைக இருக்குல்ல மதினி..நாம வாழ்ந்து தான ஆகணும்'' என்று பொதுவாக சொல்லிவைத்தேன்.
அன்னை லாட்ஜிற்கு நடந்தே வந்தேன். தேய்பிறை நிலவு ஏதோ சொல்ல நினைத்து சொல்ல இயலாமல் தேய்ந்து கொண்டிருந்தது.
ஞாயிற்றுக்கிழமை மதினியையும் குழந்தைகளையும் பார்க்க நினைத்தேன். போகவில்லை. திங்கள் கிழமை என் தலைமை அலுவலகத்தில் இருந்து நான் பதவி உயர்வு பெற்றுவிட்டதாகவும் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உடனடியாக பதவி ஏற்க வேண்டும் எனவும் தகவல் வந்திருந்தது. செவ்வாய்க்கிழமை மதினியை பார்க்க போனேன். சந்தின் முனையிலேயே கவனித்தேன். யாரோ வந்து அவளுக்கு ஆறுதல் சொல்லி விடைபெற்று கொண்டிருந்தனர். என்னை நட்புடன் ஒரு பார்வை பார்த்து கடந்து சென்றனர். கதவை நான் தட்ட, மதினி மௌனமாக கதவை திறந்தாள் கண்களாலேயே வா என்றாள். நித்ய பௌர்ணமி என்று நான் பார்த்து வியந்த முகம் கருமேகம் மறைத்த நிலவாய் எனக்கே பார்க்க பிடிக்கவில்லை. திறக்காத ஒரு ஏர்மெயில் கவரை கையில் திணித்து விட்டு ''தேத்தண்ணி போடவா'' என்றாள்.
''இல்ல வேணாம்...கொஞ்சம் தண்ணி மட்டும் போதும்'' என்றேன்.
கவரை பிரித்தேன்.
ஐக்கிய அமீரகத்தின் வெளியுறவுத்துறையிலிருந்து அனுப்பப்பட்ட கடிதம். உடல்கள் அடையாளம் காண இயலாவண்ணம் சிதைந்து போனதால் அதை அங்கேயே இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ததாகவும் இறந்தோரின் குடும்பதிற்கு 6லட்சம் ரூபாய்கள் நிவாரணம் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தது. வங்கி கணக்கு விவரங்களை உடனடியாக தெரிவிக்கும்படி அறிவுறுத்தியிருந்தனர்.
நண்பர். ஹுசைன் வேலை பார்க்கும் ஸ்டேட் பாங்கில் ஒரு வங்கி கணக்கை மதினியின் பெயரில் துவக்கி கொடுத்துவிட்டு வீடு திரும்பிய பின் தான் என் பணி மாற்றல் குறித்த விவரத்தை சொன்னேன். பெருகி வந்த கண்ணீரை துடைத்த படியே சொன்னாள் ''நீ போ...நீ ஒன் பொழப்பப் பாரு...இந்த தரித்தரம் பிடிச்ச சிறுக்கிக்காக நீ எதுக்கு கஷ்டப்படணும்...ஒனக்கும் அம்மா, அப்பா தங்கச்சி இருக்காகல்ல...போ...ஆனா மதினியை மறந்திடாத...''
எதுவும் பேசாமல் வந்தேன். இதயம் கனத்திருந்தது. உடல் எங்கும் ஒரு இனம் புரியாத வலி. மருந்துகளாலோ மதுவாலோ அதை குணப்படுத்த இயலாது என்றும் காலமே அதற்கு மருந்து என்று மட்டும் புரிந்தது.
மார்கழி மாதம் கடைசி நாள் நாகர்கோயிலிலிருந்து ஜோத்பூர் வந்து, பின்பு பத்தாண்டுகள் அங்கிருந்து பல்வேறு மாநிலங்கள் பயணப்பட்டு மீண்டும் மதுரை வந்து ஒரு முறை நாகர்கோயில் வந்த போது மதினியை காண விழைந்தேன்.
பாரதப்போர் முடிந்து ராதையை காணச் சென்ற கிருஷ்ணனின் மனநிலையில் அப்போது நானிருந்தேன். மாலை மயங்கி இரவு மலரும் நேரம் நான் தங்கியிருந்த பார்வதி இண்டர் நேஷனல் ஹோட்டலில் இருந்து எஸ்.எல்.பி பள்ளி மைதானம், டத்தி ஸ்கூல் வழியாக கலெக்டர் ஆபிஸ் வந்து அதன் எதிர் திசையில் ராமவர்மாபுரம் நோக்கி நடந்தேன். செல்லும் வழியில் மதினி என்னை எப்படி எதிர்கொள்வாள் என்று சிந்தித்தபடியே நடந்தேன். சென்று மதினி குடியிருந்த தெருவரை பயணித்த நான், கிருஷ்ணன் ராதையை காணாமல் திரும்பியதைப் போன்றே நானும் திரும்பினேன். அதே மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாள்...பல ஆண்டுகளுக்கு முன்னாள் நான் சிரித்துக்கொண்டே வந்தது நினைவிற்கு வந்தது....''இது என்ன புது பழக்கம்'' காதோரம் யாரோ கிசுகிசுக்க...இந்த முறை சிரிக்க முடியாமல் அழுது கொண்டே நடந்தேன்...வானத்தில் ஆண்டாள் பாடிய முழு நிலவு பிரகாசித்துக் கொண்டிருந்தது....!
Subscribe to:
Posts (Atom)