Monday, January 22, 2018


மண நாள் வாழ்த்து - மனைவிக்கு...!
-----------------------------------------------------------
ஆண்டுபதி நான்கும் நிறைவான
காதலும் குறைவில்லா மோதலும்
எரியும் காமமும் முனைமழுங்கா
மோகமும் இன்னதென்று வயதில்
தேடிய தேடலுக்கு வாழ்க்கைஎனும்
விடையிறுத்தாய் பெறுவோம் இன்னும்
கோடிசுகம் புவியில் எஞ்சியது
ஏதுமில்லாமல் மிஞ்சியது நாமே!

இடர்பல வந்த போதிலும்
உன் சுடர்மதி கொண்டு
சீர்மிகு வாழ்க்கை தந்தாய்
இடித்துரைக்கும் உன்னறிவை
ஈரவிழிப் பார்வையினை
துயர்துடைக்கும் சொல்தரும்
இறையம் பெற்ற உன்னை - நான்
தாரமாய் தவமிருந்தோ பெற்றேன்!

1 comment:

  1. மேலும் மேலும் பல்லாண்டு காலம் வாழ மனம் மார வாழ்த்துக்கள்

    ReplyDelete