Tuesday, May 31, 2016

கலவியும் கவிதையும் (4) - (பெரியதாக ஒரு சிறுகதை)

கலவியும் கவிதையும் (4) - (பெரியதாக ஒரு சிறுகதை)
எது ஒன்று அழகாக இருக்கிறதோ அதன் மீது காதல் வயப்படுவதோ அல்லது காமவயப்படுவதோ இயல்பு என்றே கருதுகிறேன். எது அழகு என்பதற்கான வரையறை தனிநபர் உளவியல் சார்ந்தது.
கவிஞர் தன் பகுதி உடலை மறைத்தபடி என்னருகே வந்து காதோரம் ரகசிய தொனியில் ''போய் குளிச்சிட்டு வர்றீயா?''
பாதி மயக்கத்தில் இருந்த நான் தள்ளாடியபடியே குளியலறையை நோக்கி நடந்தேன்.
ஹோட்டலின் குளியலறை பிரம்மாண்டமானது. ஷவரில் வெதுவெதுப்பாக மிதமான வேகத்தில் பாய்ந்து வந்த வெண்ணீர் குளிக்கும் அனுபவத்தை மேன்மையுற செய்தது. இந்த தருணத்தில் குளியலறை திறக்கப்படும் ஓசை கேட்டு திரும்பினேன்.
கவிஞர் சுடிதாரின் மேலாடையை மட்டும் அணிந்தபடி என்னை நோக்கி வந்தார்
''ஷவரை கொஞ்சம் க்ளோஸ் பண்ணு''
சொன்னபடி செய்தேன். அருகில் வந்து என் காதோரம் அவரது தேவையைக் கிசுகிசுத்தார்.
''நான் எப்பவுமே அப்படிதான் குளிப்பேன்'' என்றேன்.
''இல்ல...எங்காளுகன்னா அந்த பிரச்சினை இல்ல...அதுனாலதான்...நீ தப்பா எடுத்துக்காத..''
''புரிந்தது...நோ பிராப்ளம்...நீங்க போங்க...நான் ஒரு அஞ்சு நிமிஷத்துல வந்துடுறேன்''
''வந்து....?''
''வந்து என்ன....?''
'இல்லை...இன்னொரு கவிதை எழுதலாமான்னு கேட்டேன்''
''ஏங்க...பேப்பரும் பேனாவும் இருந்தா நம்ம பாட்டுக்கு எழுதிக்கிட்டே இருக்கிறதா என்ன...இருந்தாலும் இங்கே எல்லாமே உங்க இஷ்டம்''
''சீக்கிரம் வந்துடு...எத்தனை மணிக்கு ஃப்ளைட்....மிட்நைட் 2.45 தானே?''
''ஆமா....நிறைய நேரம் இருக்கு...கவலைப் படாதீங்க...நாம கவிதையில்ல...காவியமே இயற்றலாம்...''
''ச்சீ...லூசு...'' முதல்முறையாக வெட்கப்பட்டார். அந்த வெட்கத்தில் துளியும் போலித்தனமில்லை.
திரும்பி நடந்த போது அவரோடு சேர்ந்து திரும்பிய சுடிதாரின் மேலாடை விலக்கத்தில் கருமேகத்தை கிழிக்கும் மின்னலென தெரிந்தது சிவந்த தொடைகள். குளியலறையிலிருந்து வெளிவந்த போது கவிஞர் கட்டிலில் இரண்டு தலையணைகளை ஒன்றன்மீது ஒன்றாக வைத்து அதன் மீது வலது கையால் தன் தலையை தாங்கியபடி காத்திருந்தார். ஈரமான துண்டை கழட்டாமல் கட்டிலில் அமர்ந்து ஒரு நிமிடம் என் பார்வையை கவிஞரின் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை ஓடவிட்டேன். சுடிதாரின் பிளவுகளில் தென்பட்ட சிவந்த தொடையில் ஒரு மச்சம் கவனத்தை ஈர்த்தது. வலதுகை ஆட்காட்டி விரலால் தொட்டேன்...
''அதிர்ஷ்ட மச்சமா இது?''
''அதிர்ஷ்டம் இல்ல அடிவாங்கிக் கொடுத்த மச்சம்''
''அடியா...யார் அடிச்சா...மச்சத்திற்கும் அடிக்கும் என்ன சம்பந்தம்?''
''அது வேணாமே....இப்போ எதுக்கு அந்த சோகக்கதை?''
''இல்ல...எனக்கு இப்போ தெரிஞ்சாகணும்''
''ஒரு நாள் என் ஹஸ்பெண்டிடம் இது எனக்கு அதிர்ஷடமான மச்சம் என்று சொல்ல அவர் ''நீ ஒரு தரித்திரம்...உனக்கென்னடி அதிர்ஷடம் வேண்டிக்கிடக்குன்னு பளார்னு அறைஞ்சுட்டாரு...நான் கவிதை / கதை எழுதுறதுனால அவருக்கு ஒருவிதமான காம்ப்ளெக்ஸ்...ஆமா...நீ உன் வைஃபை அடிப்பியா?''
''இல்லை...ஒருபோதும் இல்லை...என்னைவிட வலிமை குறைந்தவர்களை நான் ஒருபோதும் தாக்குவதில்லை''
''உனக்கு இந்த மச்சத்தை பார்த்தா என்ன தோணுது?''
''அதிர்ஷடம் என்றதும் உன் மச்சம் ஞாபகம்...அழகு என்றதும் உன் மொத்தம் ஞாபகம்..அப்படிங்கற பாட்டு வரி தான் ஞாபகத்திற்கு வருது'
''என்ன பாட்டு அது''?
பழனிபாரதி எழுதுனது...படம் பெயர் நினைவில்லை...கார்த்திக் முழுக்கை சட்டை போட்டிருப்பார்...ரோஜா தொப்புளை மறைத்து சேலை கட்டியிருப்பார்...ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்...அப்படின்னு துவங்கும்...நல்ல மெலோடி...எனக்கு ரொம்பப் பிடிக்கும்''
''வேறென்ன ஞாபகம் வருது?''
''செந்தழலின் ஒளி எடுத்து
சந்தனத்தில் குளிர் கொடுத்து
பொன் தகட்டில் வார்த்து வைத்த
பெண் உடலை என்னெவென்பேன்
மடல்வாழை தொடை இருக்க
மச்சம் ஒன்று அதிலிருக்க
படைத்தவனின் திறமை எல்லாம்
முழுமை பெற்ற அழகி என்பேன்''
பாடலின் கடைசி வரியை உச்சரித்து முடிக்கும் முன்பே கவிஞர் உதட்டருகே நெருங்கி இருந்தார்.
நெற்றியும் மூக்கின் நுனியும் சந்தித்துக் கொண்டிருந்த வேளையில் இருவரது மூச்சுக்காற்றும் கூடி முயங்கிக் கொண்டிருந்தன.
மீண்டும் ஒரு கவிதையை கவிஞர் மிக நுட்பமாக வடித்துக் காட்டினார்.
மிகச்சரியாக இரவு பத்துமணிக்கு விமான நிலையம் வந்தடைந்தோம்.
''எங்கே உன்னோட போர்டிங் பாசை காட்டு''
''ஏன்...சீட் நம்பர் தெரியணுமா....41கே''
''எப்படிடா இது....என்னோட நம்பர் 41ஜே...நம்பவே முடியலேல்ல''
''இது நமது வாழ்க்கையின் இந்த கணத்து தேர்வு...அவ்வளவுதான்''
''பொத்துறியா...ஓரேடியா தொறக்கிற...சீட் பக்கத்து பக்கதுல அமைஞ்சதுக்கு இவ்வளவு பெரிய தத்துவமா?''
''சரி வாங்க...நம்ம முதல்ல சாப்பிட போவோம்....இங்க டேஸ்ட் ஆஃப் இந்தியான்னு ஒரு ரெஸ்டாரண்ட் இருக்கு...நல்லா இருக்கும்''
நாங்கள் நின்று கொண்டிருந்த இம்மிக்ரேசன் கவுண்டருக்கு அருகிலேயே இருந்தது அந்த உணவகம். அன்றைய சிறப்பு மட்டன் பிரியாணி.
வயிறாற உணவருந்தி விமானத்தில் அருகருகே அமர்ந்தோம்.
தமிழில் இருப்பதிலேயே மோசமான திரைப்படங்கள் குறுந்தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தன. எங்களை சுமந்து கொண்டு அந்த அலுமினியப் பறவை ஆகாயத்தில் பறந்த போது கவிஞர் காதுகளை பாடல் கேட்பதற்காக தயார் படுத்தியிருந்தார். அவரது  மொபைல் போனிலிருந்து பாடல்கள் காதுகளுக்குள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. கண்களால் எனக்கும் வேண்டுமா எனக்கேட்டார். சரி கேட்போமே என்று ஒரு இயர்போனை எனது காதுகளுக்குள் பொருத்தினேன்.
இளையராஜாவின் இசை காது வழியாக நேராக இதயத்தில் பாய்ந்தது. ஜென்சி தனது காந்தக்குரலால் ஈர்த்தார்.
''ஆயிரம் மலர்களே மலருங்கள்...அமுதகீதம் பாடுங்கள் ஆடுங்கள்...காதல் தேவன் காவியம்...நீங்களோ நாங்களோ...நெருங்கிவந்து சொல்லுங்கள் சொல்லுங்கள்...ஆயிரம் மலர்களே மலருங்கள்..''
காந்தத்தின் இரு துருவங்களுக்கு இடையே சிக்கிய இரும்புத்துகள்கள் போல ஜென்சி தனது குரலால் எங்கள் இதயங்களை கட்டிப்போட்டார்.
திடீரென்று பாடலை கவிஞர் நிறுத்தினார்.
''ஆமா...சினிமா பாட்டுக்கு வார்த்தை மாத்தி போட்டு பாடுவேன்னு சொன்னியே...இந்த பாட்டுக்கு ஒரு மாத்துப்பாட்டு எழுது பார்க்கலாம்''
இந்த தாக்குதலை நான் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் விமானத்தின் உள்ளே பாட ஆரம்பித்தேன்.
''ஆயிரம் டவுசரு கிழிஞ்சது....அதுல ஒண்ணு என்னுது...நல்லது....கிழிஞ்சு போன டவுசரு...புதுசுதான் தைச்சது டெய்லர் கடையில் உள்ளது...உள்ளது''
வழக்கம் போல வெடித்து சிரிக்க தயாரானார் கவிஞர். இந்தமுறை நான் அனுமதிக்கவில்லை. வாயைப் பொத்தினேன். ஆனால் கைகளால் அல்ல. இமைகள் பட்டாம்பூச்சியின் சிறகுகள் போன்று சிறகடித்தன. இருபது வினாடிகளுக்கு பின் அவர் விடுதலை பெற்றார். அவர் மெல்லும் சூயிங்கம் பெயரை விமானம் சென்னையில் இறங்குவதற்கு முன்பாக கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும் என நினைத்துக் கொண்டேன்.
''ப்பிசாசு...இப்படியா பண்ணுவ''
''எல்லோரும் தூங்க ஆரம்பிச்சாச்சு...இப்போ போயி அவங்கள எழுப்பிவிடணுமா?''
''ஆமா...உங்க வீட்டுக்காரரு அடிப்பாரு சொன்னீங்களே என்னென்ன காரணத்துக்கு அடிப்பாரு?''
''அதை ஏன் கேக்குற....காரணமே இல்லாம அடிப்பாரு...ஒருநாள் ரசம் ஏன் தண்ணியா இருக்குண்ணு அறைஞ்சாரு''
''அப்போ எப்படி ரியாக்ட் பண்ணுவீங்க?''
''அப்போதைக்கு ஒண்ணும் செய்ய முடியாது...ஆனா நான் அவரை வேற மாதிரி பழிதீர்த்துக்குவேன்...நேத்து ராத்திரி நடந்தது அவரை பழிவாங்க நான் மேற்கொண்ட ஒரு நடவடிக்கை...ஒனக்கு இது புரியாது...''
விமானம் தரையிறங்கிய போது சென்னையில் மணி காலை 8.15
இமிக்ரேசனில் பெரிய கூட்டம். கவிஞர் நேராக வெளிநாட்டு தூதர்களுக்கான சிறப்பு கவுண்டரை நோக்கி என்னையும் இழுத்துக் கொண்டு நடந்தார். மிக எளிதாக வெளியேறினோம். கீழே சுங்க அதிகாரிகளின் சோதனையையும் மிக எளிதாக கடந்து வெளியே வந்தோம். நான் ஃபாஸ்ட் ட்ராக் டாக்சியில் முன்பதிவு செய்து பில்லை எடுத்துக் கொண்டு வரும்வரை கவிஞர் காத்திருந்து என்னோடே வெளியே வந்தார்.
நான் எப்படி விடைபெறுவது என்ற குழப்பத்தில் இருந்தேன்.
''சரி...எல்லாத்தையும் மறந்துட்டு உன் வேலையை பாரு...புரிஞ்சதா?''
திடீரென எங்கேயிருந்தோ சிவப்பு விளக்கு சுழல ஒரு அரசு வாகனம் வர அதில் ஏறி மின்னெலென மறைந்தார்.
எனக்கு வியர்த்தது. இவர் யார்...இவர் அவர் இல்லையா...அவர்தான் இவர்...எனக்கு நன்றாகத் தெரியும்...அதே முகம்...அதே உதடு...அதே பல்வரிசை...வலக்கை மணிக்கட்டில் மச்சம்...பெரிய பாதம்...நீண்ட விரல்கள்...அதே கொச்சையான ஆங்கிலம்...அவர்தான் இவர்....இவருக்கும் அரசுக்கும் என்ன சம்பந்தம்...இவர் யார்...அன்று புத்தக அறிமுகவிழாவில் சந்தித்த நபர் யார்...ஐயோ இது என்ன புதுவிதமான விபரீதம்?''
இத்தனை குழப்பத்திற்கிடையே டிரைவர் எனது பைகளை காருக்குள் திணித்து வண்டியை போரூரை நோக்கி செலுத்தத் தொடங்கியிருந்தார் மனம் தொடர்ந்து கலவரத்திலும் குழப்பத்திலும் ஆழ்ந்து கொண்டிருக்க எனது நாசி பல்வேறு மணங்களை உணரத் தொடங்கியிருந்தது.
கார் நந்தம்பாக்கம் வந்தபோது போக்குவரத்து நெரிசல் அதிகமாகி அது சீராக நெடுநேரம் பிடிக்கும் என்று கருதிய டிரைவர் '' சார்...ஐ.டி.பி.எல் காலணி வழியா குறுக்கே போயி ஈவிகேஎஸ். இளங்கோவன் வீடு வழியா போய்டலாம் சார்'' என்றார்.
'''எப்படியாவது போங்க சார்'' என்றேன் சுரத்தே இல்லாமல்.
அங்கேயும் எங்களைப் போன்றே ஒத்தசிந்தனை கொண்டோரால் போக்குவரத்து நெரிசல்.
வெறித்து வானத்தைப் பார்த்தேன். மேகம் இல்லாத வானம் எனக்கு உவப்பைத் தரவில்லை. பக்கவாட்டில் பார்வையை செலுத்தினேன்.
பெரிய மரங்களால் சூழப்பட்ட அந்த பிராந்தியத்தில் காலை வெப்பம் குறைவாக இருந்தது.
ஒரு அணில் மரத்திலிருந்து இறங்கி வந்து கீழே விழுந்து கிடந்த பழக்கொட்டையை எடுக்க விரைந்து வந்தது. எதிர்பாராமல் எங்கேயிருந்தோ வந்த வெருகுப் பூனை அந்த அணிலை கவ்விக் கொண்டு காருக்கு பின்திசையில் சென்றது. அதிர்ந்து போய் கார்க்கதவு வழியே எட்டிப்பார்க்க இயன்ற அளவு கழுத்தைத் திருப்பினேன். என் பார்வை பூனையை நோக்கியும் கார் அதற்கு எதிர்த்திசையிலும் விரைந்தன.




Monday, May 23, 2016

யானைமலைப் பயணம்: 16-05-2016


தமிழக வாக்காளர்கள் தனக்கான ஆட்சியாளர்களை தேர்வு செய்யும் ஜனநாயகக் கடமையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்த போது இந்த போலிஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத நான் மதுரையில் என் மாமியார் வீட்டில் கட்டிலில் அமர்ந்தபடி மோட்டுவளையை பார்த்துக் கொண்டிருந்தேன்.
அருகே இருந்த என் மகன் அப்பு ''எங்கேயாவது வெளியில் போகலாமாப்பா'' என்றான்.
வெளியே வானம் தான் தேக்கி வைத்திருந்த மேகங்களில் இருந்து தவணை முறையில் தண்ணீரை தாரை வார்த்துக் கொண்டிருந்தது.
இருப்பினும், நெடுநாள் ஆசையான யானைமலை அடிவாரத்தில் இருக்கும் சமணர்குகைக்கு செல்ல முடிவெடுத்தேன்.
நண்பர் வேலுவின் ஆட்டோவை வரவைத்து நானும் என் மனைவியும் மகனும் சென்றோம்.
எங்கள் வீட்டிலிருந்து 15.கி.மீ தொலைவில் தான் யானைமலை இருந்தது. மழை பெய்து ஓய்ந்த மாலையில் வெயிலின் தாக்கமில்லை. நிதானமான வேகத்தில் யானைமலையின் அடிவாரத்தை அடைந்த போது தான் அந்த குகைக்கு செல்லும் பாதை தற்காலிகமாக ஒருவாரம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அப்புவுக்கு மூட் அவுட்டாகி விட்டது. அவனது குறிக்கோள் சமணர் குகையை பார்ப்பதல்ல, ஆட்டோ பயணம் அவ்வளவே. இருப்பினும் அதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டால் எதிர்கால வரலாறு என்ன சொல்லும்? ஆட்டோ ஓட்டுனரும் குடும்ப நண்பருமான வேலுவிடமே கேட்டோம்.
அவர் அருகே இருக்கும் நரசிங்கப்பெருமாள் கோயிலுக்கு போகலாம் என்றும் பின்பு அங்கேயிருந்து அருகில் இருக்கும் பாலதண்டாயுதபாணி கோயிலுக்கும் அதனருகே இருக்கும் பிரதியங்கிராதேவி கோயிலுக்கும் செல்லலாம் பரிந்துரைத்தார்.
சரி...எப்படியும் ஆட்டோவிற்கு வாடகை கொடுத்தே ஆகவேண்டும் எனவே செல்லலாம் என்றாலும் கூட வெறும் பெருமாள்,முருகன் மற்றும் அம்மன் போன்ற காரணிகள் என்னை உற்சாகப்படுத்தவில்லை.
இதை உணர்ந்த வேலு நரசிங்க பெருமாள் கோவிலில் விற்கப்படும் புளியோதரையின் மகத்துவத்தை எடுத்துரைத்தார்.
மற்ற கோயில்களில் வழங்கப்படும் புளியோதரைக்கும் இங்கு விற்கப்படும் புளியோதரைக்கும் பெரிய வேறுபாடு உண்டென்றும் அது யானைமலையை ஒட்டி அமைந்துள்ள ஊற்று நீரில் செய்யப்படுவதால் பிரத்யேக சுவையை பெறுகிறது என்றார். இதை உறுதி செய்ய முதலில் ஒரு பொட்டலம் வாங்கி சுவைபார்த்து பின்பு கூட சன்னிதிக்கு செல்லலாம் என்றும் ஆலோசனை வழங்கினார்.
புளியோதரை எனக்கு பிடித்தமான ஒன்று. பள்ளியில் படிக்கும் போது எங்கள் வீட்டிலிருந்து 5.கி.மீ தொலைவில் உள்ள விரகனூர் அணை, 10கி.மீ தொலைவில் உள்ள விமான நிலையத்திற்கு இன்ப சுற்றுலா(?) செல்லும் போது அம்மா கட்டித்தரும் புளியோதரை பொட்டலத்தை பிரிக்கும் போது அதன் மணமும் அதில் ஒளித்து வைக்கப்பட்ட முட்டையும் அம்மாவின் அன்பும் ஒருசேர வெளிப்படும். அந்த தருணங்கள் வாழ்வின் மறக்க இயலாத மறக்க கூடாத தருணங்கள். எனவே புளியோதரையின் பொருட்டு பெருமாளை சந்திப்பது என்று முடிவு செய்தோம்.
அது ஒரு குடவரைக்கோயில். பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும். தமிழ் வட்டெழுத்துக்களும் தெலுங்கு எழுத்துக்களும் பாலி மொழியில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகளும் நிரம்பிய கோயில். இரண்டே இரண்டு சன்னிதிகள். ஒன்று பெருமாள் மற்றொன்று தாயார். தரிசம் முடிந்தது. இனி புளியோதரை. மடப்பள்ளியில் செய்யப்பட்டது என்று விற்பனையாளர் தெரிவித்தார். மற்ற கோயில்களில் ஒப்பந்த அடிப்படையில் வெளியே செய்யப்பட்ட பிரசாதங்கள் விற்கபடும் சூழலில் இங்கே அவர்களே சுயமாக செய்து விற்கிறார்கள். அபாரமான சுவை. ஆளுக்கு இரண்டு பொட்டலங்கள் வாங்கி சாப்பிட்டோம். இரவு உணவு முடிந்தது.
அருகே நடை தூரத்தில் பாலதண்டாயுதபாணி கோயில். தமிழ்க்கடவுள் முப்பாட்டன் முருகன் ராஜ அலங்காரத்தில் இருந்தார்.
கோயில் மலையின் மீது இருந்த பெரும்பாறையின் மீது நிர்மாணிக்க பட்டிருந்தது. ஆகாயத்தில் கரிய மேகங்கள் சூழத் தொடங்கின.
இருள் கவிழும் நேரம். வானம் ஒரு பெருமழைக்காக தயாராகிக் கொண்டிருந்தது. மெல்ல பாறை மீது ஏறி அருகே இருந்த பிரதியங்கரா தேவி சன்னதிக்கு சென்றோம். சுற்றுச் சுவர்கள் கருமை நிற மரத்தால் அமைக்கப்பட்டிருக்க உள்ளே அம்மன் சிலை மஞ்சள் நிறத்தில் சிங்கத்தின் முகத்தை ஒத்த அமைப்புடன் பார்க்கவே ஒருவித கிலியை மனத்தில் உண்டுபண்ணியது.
சன்னிதியின் உள்ளே எரிந்து கொண்டிருந்த ஒரே ஒரு விளக்கு சூழலின் அமானுஷ்யத் தன்மையை அதிகப்படுத்தியது. எதிரே இருந்த மண்டபத்தில் அமர்ந்தோம். மங்கிய ஒளியில் வழக்கத்தைக் காட்டிலும் மதுரை மிக ரம்மியமாக இருந்தது. அப்பு மழை வரும்வரை அங்கேயே அமர்ந்திருக்கலாம் என்றான். மறுநாள் ஊருக்கு கிளம்ப வேண்டும் என்று சமாதானப்படுத்தி அழைத்து வந்தோம். நாங்கள் வீடு திரும்பும் வரைக்கும் காத்திருந்து வானம் பெருமழையைக் கொட்டித் தீர்த்தது. அடுத்த முறை சமணர் குகைக்கு போவதற்கு முன்னால் நரசிங்கப் பெருமாள் கோயிலுக்குச் சென்று புளியோதரை சாப்பிட வேண்டும்.

Thursday, May 19, 2016

''கலவியும் கவிதையும்(3): (பெரியதாக ஒரு சிறுகதை)

''கலவியும் கவிதையும்(3): (பெரியதாக ஒரு சிறுகதை)
இப்போது நான் என்ன செய்ய வேண்டுமென கவிஞர் விரும்புகிறார் என்று ஊகிக்க அதிக நேரம் பிடிக்கவில்லை. மாறாக, என்னுள் இருந்த அனைத்து தடைகளும் இப்போது விடைபெற்றிருப்பதை நானே உணர்ந்தேன்.
''நீ என்ன பெர்ஃப்யூம் யூஸ் பண்ற?''
''இல்ல...நான் அப்படி எதுவும் பயன்படுத்துவதில்லை...காரணம் நான் இருவேளை குளிக்கும் பழக்கமுடையவன்''
''குளிக்கிறதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்?''
''''இப்போ இங்கே நடக்குறது எல்லாமே சம்பந்தத்தோடதான் நடக்குதா என்ன?...சரி...இப்போ நான் என்ன செய்யணும்?''
''நீ ஒண்ணும் செய்ய வேணாம்...நானே எல்லாத்தையும் செஞ்சுக்குறேன்...புரியுதா''
அனைத்தையுமே அவர்தான் செய்தார்.
சரியாக பதினோரு நிமிடம் கழித்து சுயம் அழிந்தது...காலம் மறைந்தது...பிரபஞ்சம் மறைந்தது...எரிந்து தீர்ந்து போன கருந்துளைக்குள் சங்கமமாகும் பெரு நட்சத்திரங்கள் போல அனைத்தும் கலந்து ஆற்றலும் பருப்பொருளும் ஒன்றாகி பிரிக்க இயலா அந்தக்கணம் கடந்து போன தருணத்தில் விழிப்பு ஏற்பட்டது...
''உங்களுக்கு என்ன பாட்டு பிடிக்கும்?''
எனக்கா....ம்ம்...நிறைய பாட்டு பிடிக்கும்...எதைன்னு சொல்றது?
ஏதோ ஒண்ணு...ரொம்ப பிடிச்சது....
பழசா...புதுசா?
''அது என்ன பழசு...புதுசுன்னுட்டு...பாட்டுல நல்ல பாட்டு...மோசமான பாட்டுன்னு தான் இருக்கு...நல்லது நிலைச்சு நிக்கும்...மோசமானது காணாமப் போயிடும்''
''வீட்ல கூட இப்படிதான் பேசுவியா...எல்லாத்துக்கும் ஒரு தத்துவ விளக்கம் கொடுத்துக்கிட்டு''
''அப்படின்னு தான் நினைக்கிறேன்''
''சரி சொல்றேன்... காதல் சிறகை காற்றினில் விரித்து வான வீதியில் பறக்கவா'' அந்தப் பாட்டு ரொம்ப பிடிக்கும்''
''சரி கொஞ்சம் பாடுங்க''
''ச்சீ...நான் பாடுனா நல்லா இருக்காது...எனக்கே பிடிக்காது''
''சும்மா பாடுங்க''
மெல்லிய குரலில் ஒரு புதுமணப்பெண் கணவனிடம் பேசும் தயக்கக் குரலில் பாடினார்
''காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்
கண்ணீர் கடலில் குளிக்கவா..''
நன்றாகத்தான் பாடினார்..துவக்கத்தில் இருந்த நடுக்கம் மறைந்து மெதுவாக சுருதியை கூட்டி மிக லாவகமாக குறில் நெடில் அறிந்து வார்த்தைகளுக்கு வேண்டிய உணர்ச்சியை அளவாக கொடுத்து எனது மார்பில் ஆட்காட்டி விரலால் கோலமிட்டபடியே பாடினார்.
''பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது..
அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேசமறந்து சிலையாய் இருந்தால்....
பேசமறந்து சிலையாய் இருந்தால்...
அதுதான் தெய்வத்தின் சந்நிதி.....
அதுதான் காதலின் சந்நிதி'
கன்ணிலிருந்து கண்ணீர் திவலைகள் என் மார்பில் உருண்டோடின. அதிர்ந்து போய் ''என்னாச்சு'' என்றேன்.
''இல்ல...ஒண்ணுமில்ல...நல்லா இருந்துச்சா?''
''அற்புதம்...இதைவிட சிறப்பாக வேறுயாரும் பாட முடியாது என்பது எனது அனுமானம்.''
''ச்சீ...பொய் சொல்ற''
''இல்ல...நான் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல''
''இந்த பாட்டு எனக்கும் பிடிக்கும். இந்த பாடல் சந்தங்களுக்கு இணையான வேறு வார்த்தைகளைப் போட்டு நண்பர்கள் மத்தியில் நான் பாடுவது வழக்கம்''
''அப்படியா...நீ பாடுவியா...எங்கே பாடு பார்க்கலாம்...ச்சீ...கேட்கலாம்''
அதே ராகத்தில் எனது வார்த்தைகளை இட்டு நான் பாட ஆரம்பித்தேன்.
''ங்கொய்யா டவுசரை வெள்ளாவி வைத்து நீலம் போட்டு நான் துவைக்கவா...உனக்கும் வெளுக்க துணிமணி இருந்தால் அதையும் கொஞ்சம் எடுத்துவா...ஆஆஆ''
வெடித்து சிரித்தார்...அடக்க இயலாத சிரிப்பு. அறையே அதிர்ந்து போகும் அளவிற்கு ஆடையே இல்லாத அடிவயிற்றை பிடித்துக்கொண்டு கண்ணீர் வர சிரித்தார். கண்கள் சிரித்தன, மார்பு சிரித்தது, வயிறு சிரித்தது....மெல்ல எழுந்து குளியலறைக்கு சென்றார்...சிரித்துக் கொண்டே!
அறைக்குள் குளிக்கும் சத்தம் கேட்டது...நான் கண் அயர்ந்தேன்.
பத்து நிமிடம் கழித்து தலையில் வெள்ளைத்துண்டை மட்டும் கட்டிக்கொண்டு கண்ணாடி முன் நின்று தன்னைத்தானே ரசித்தார்.
வலதுகையை இடுப்பில் வைத்துக்கொண்டு, இடது கையை மாற்றி இடுப்பில் வைத்துக் கொண்டு, பின்பு நாக்கைக் கொண்டு வலது கன்னத்தை உப்ப வைத்தார்...அதே போன்று இடது கன்னத்திற்கு நாக்கை மாற்றி துருத்தினார்...தன்னைத்தானே பகடி செய்து கொண்டு மெல்ல வலது கையின் நடுவிரலை நெற்றி, மூக்கு, உதடு, நாடி, கழுத்து, மார்பு, வயிறு, அடிவயிறு என படர விட்டார்.
துண்டு தலைமுடியிலிருந்து நழுவி சரிய, சரிந்த துண்டு இடது பிருஷ்டபாகத்தை லேசாக மறைத்தது. வலதுகை கொண்டு அதை பிடித்த ஒரு கணம் கிரேக்க சிற்பமான வீனஸ் கல்லிபிகஸை நினைவூட்டினார். அழகு பலவகைப்படும். ஆனால் அழகும் அறிவும் இணையும் அந்த புள்ளி முக்கியமானாது. வெகுசிலரே அந்த அழகை பெறுகின்றனர். நான் முதன்முதலாக அந்த அழகை  சந்தித்தேன்.
(தொடரும்)






''கலவியும் கவிதையும்(2): (பெரியதாக ஒரு சிறுகதை)

''கலவியும் கவிதையும்(2): (பெரியதாக ஒரு சிறுகதை)
எனக்காகவே காத்திருந்தது போன்று கதவு திறந்து கொண்டது. இப்போது கவிஞர் மெல்லிய ஊடுருவும் தன்மை கொண்ட சேலையில் புதிய தோற்றத்தில் இருந்தார். அறையெங்கும் நறுமணம் நிரம்பியிருக்க என்னவகையான மணம் என்று கண்டறிய எனது புலன்கள் போராடிக் கொண்டிருந்தன. அறையின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு கட்டிலின் மேலே இருந்த ஆறு விளக்குகள் மட்டும் குறைவாக ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்தன. சூழ்நிலையை நான் அவதானிக்க கவிஞரோ என்னை முதல்முறையாக கரம் பற்றினார்.
நந்தவனத்து பூக்கள் அனைத்தும் ஒருசேர கோர்க்கப்பட்ட மாலை போன்று  அனைத்து வண்ணங்களும் எளிதில் புரியாத விகிதாசாரத்தில் கலக்கப்பட்டு உருவாக்கப்பட்டிருந்தது சேலை. கட்டிலின் ஓரத்தில் அமர வைக்கப்பட்டேன்.
எனக்கு உண்டான கிளர்ச்சியை அச்சம் மேலாதிக்கம் செய்ய அவரது கையை எனது கரத்திலிருந்து விடுவித்துக் கொண்டேன்.
''பயமா இருக்கா''
''இல்லை...எதுக்கு பயம்? நீங்க என்ன பூதமா?
''பூதம் தான்...நான் ஒருவிதமான பிசாசு...கவிதை எழுதும் போதும்...காமவயப்படும் போதும்...''
''கவிதைக்கும் காமத்திற்கு என்ன சம்பந்தம்?''
''காகிதத்தில் எழுதப்படும் காமம் கவிதை...கட்டிலில் எழுதப்படும் கவிதை காமம்''...அவ்வளவு தான்!
புரியலீங்க....!
''அப்புறம்...இது பேனா இது பேப்பர்னு படம் வரைஞ்சு பாகம் குறிச்சி சொன்னா தான் புரியுமா உனக்கு?''
நான் இப்போ என்ன செய்யணும்?
''நீ ஒண்ணும் செய்ய வேணாம்....நான் சொல்றத மட்டும் செஞ்சா போதும்''
முன் கையை என் நாசித்துவாரத்தின் கீழே வைத்து ''இது என்ன மணம்னு கண்டுபிடிக்க முடியுதான்னு பாரு''
ஆழமாக முகர்ந்தேன்...அது புதினாவின் மணம்....!
புதினா... என்றேன்.
''சீ...இது மிண்ட் ஃப்ளேவர்''
''ரெண்டும் ஒண்ணு தான்...நான் தமிழ்ல சொன்னேன் நீங்க ஆங்கிலத்தில் சொன்னீங்க....அவ்வளவு தான் வித்தியாசம்...''
''ஓ...அப்படியா...சரி...சரி...இப்போ இது என்ன மணம்னு கண்டுபிடி பார்க்கலாம்''
கழுத்தை மெல்ல என்னருகே கொண்டு வந்தார்...
மல்லிகைப்பூ மணம் என்னை மயக்கியது....
வழக்கமாக தமிழிலேயே பேசும் வழக்கம் கொண்ட நான் மெதுவாக கிறக்கத்துடன் ''ஜாஸ்மின்'' என்றேன்.
''வெரிகுட்....ஏன் இப்போ இங்கிலீசில் பேசின?''
''ம்ம்...தெரியலையே...''
''சரி பரவாயில்லை...இப்போ இது என்ன ஃப்ளேவர்னு கண்டுபிடி''
எனது நாசி இப்போது மெல்லிய சேலையின் ஊடே தெரிந்த தொப்புளுக்கு அருகாமையில் அமிழ்த்தப்பட்டது.
இனம் புரியாத மனம். என்ன பெயர் என்று தெரியவில்லை. நான் மௌனம் காப்பதை ரசித்தார் கவிஞர்.
ம்ம்...என்னாச்சு...?
''இல்லை இது பெயர் தெரியலை...ஆனா நான் பயன்படுத்தும் ஒரு மணம் தான் இது...இப்போ எனக்கு சரியா இனங்கண்டு சொல்லத்தெரியல''
''நல்லா இன்னொரு தடவை ட்ரை பண்ணிப்பாரு'' மீண்டும் அவரது அடிவயிற்றை முத்தமிட்டவாறு என் நாசியால் நுகர்ந்தேன்.
ஒருவேளை நான் பயன்படுத்தும் ஆஃப்டர் ஷேவ் ஓல்டு ஸ்பைஸ் மணமோ...இல்லை வேறு என்னவோ?
சரி இருக்கட்டும் என்று பொதுவாக ''மஸ்க்'' என்று சொல்லி வைத்தேன்.
''ப்ரில்லியண்ட்....அப்சொலுயூட்லி ப்ரில்லியண்ட்...எப்பிடி கண்டுபிடிச்ச?''
''தெரியல...ஒரு குத்துமதிப்பா சொன்னேன்''
''சரி..இது என்ன ஃப்ளேவர்னு சொல்லு''
கவிஞர் தனது சேலையை ஒதுக்கினார். திரும்பினார். இடுப்பின் அருகே என்னை முகருமாறு பணித்தார்.
பல்வேறு மணங்களின் கூட்டுக்கலவையினால் எனது நுகர்வு புலன் ஏற்கனவே பேதலித்திருந்தது.
மெல்ல எனது இரு கரங்களாலும் அவரது இடுப்பை பிடித்துக் கொண்டு எனது மூக்கால் மோப்பம் பிடித்தேன்.
ரோஜாப்பூ மணம் என்னை அள்ளிக் கொண்டு போனது.
எனக்கும் கூட கேட்காத ரகசிய குரலில் ''ரோஜா'' என்றேன்.
''இது எல்லோரும் கண்டுபிடிக்கக்கூடியது தான்...இப்போ லாஸ்ட் அண்ட் ஃபைனல் இது என்ன மணம்னு பாரு''
சடாரென சேலையை இடுப்புக்கு கீழே நன்கு இறக்கி விட்டார்....பிருஷ்ட பாகங்கள் பாதிக்கும் மேலே தெரிய நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன்.
ஆவல் என்னை தூண்ட எனது நாசியை அருகே கொண்டு செல்ல வேண்டிய அவசியமே இல்லாமல் சந்தன மணம் அறையெங்கும் பரவியது.
(தொடரும்)











கலவியும் கவிதையும் (1): (பெரியதாக ஒரு சிறுகதை)

கலவியும் கவிதையும் (1): (பெரியதாக ஒரு சிறுகதை)
அன்று  ஃப்ரான்ஸ் தேசத்தின் தலைநகரான பாரீஸ் நகரத்திலிருந்து துபாய் வர சார்ல்-தே-கால் விமான நிலையம் வந்தடைந்தேன். அனைத்து பரிசோதனைகளையும் முடித்து விமானத்தில் ஏறி அமர்ந்த பின்னால் முதன்மை விமானி விமானத்தில் கோளாறு எனவும் எனவே விமானம் தாமதமாக புறப்படும் என்றும் அறிவித்தார். தாமதம் சற்றேறக்குறைய 6மணி நேரம். நான் துபாய் வந்தடைந்த போது சென்னை - துபாய் விமானம் என்னை விட்டு புறப்பட்டு சென்றிருந்தது. வழக்கம் போல் எமிரேட்ஸ் நிர்வாகம் அவர்களது ப்ரெசிடெண்ட் விடுதியில் தங்க வைத்தது. விடுதிக்கு அழைத்துச் செல்லும் வாகனத்திற்காக காத்திருந்த பொழுது தான் அவரை கவனித்தேன். அவரைக் காட்டிலும் அவரது எழுத்து நன்கு அறிமுகமான ஒன்று. ஒரு புத்தக அறிமுகவிழாவில் சந்தித்து அளவளாவிய அனுபவமும் உண்டு. மேலும் அங்கிருந்த நபர்களில் தமிழ் தெரிந்த நபர் அவர் ஒருவர் தான். நானே என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். சிலமணித்துளிகளில் நாங்கள் சந்தித்துக் கொண்ட அந்த விழாவை நினைவு கூர்ந்தார். ஒன்றாய் சென்று விடுதியில் தங்கினோம். 
அவர் எழுதிய புத்தகங்களின் பெயர்களை வரிசைப்படுத்திக் கொண்டே வந்தேன். வியப்பாக என்னை நோக்கி '' உங்களுக்கு இதெல்லாம் பிடிக்குமா? என்றார். என்னை பாதிக்கும்படி எழுதும் எந்த எழுத்தும் எனக்கு பிடிக்கும் என்றேன்.
''குளிச்சிட்டு டைனிங்க் ஹால் வாங்க பேசுவோம்''
''கண்டிப்பா...இப்படி ஒரு வாய்ப்பு இனி எப்போது எனக்கு கிடைக்கும்?''
உணவி விடுதியில் மிக கவனமாக தனக்குத் தேவையான உணவு வகைகளை கவிதைக்கு சொற்களை தெரிவு செய்யும் கவனத்துடன் தேர்ந்தெடுத்தார்.
''உங்களை நீங்கன்னு சொல்றதா...இல்ல நீன்னு சொல்றதா...பாக்குறதுக்கு சின்னப் பையனா தெரியுறீங்களே'' என்றார் புன்னகையுடன்.
''நான் உங்களை விட வயதில் சிறுவன் தான்...ஆனால் எனக்கு திருமணமாகி ஒரு மகன் உண்டு எனவே நான் பாலகன் அல்ல'' - என்றேன்.
உணவகம் எங்கும் சலசலப்பு...அதை அமைதியின்மை என்றோ அமைதி என்றோ வகைப்படுத்த இயலா சூழலாய் இருந்தது.
''ரொம்ப தொந்தரவா இருக்கும் போலருக்கே'' - ஒருவித நெருடலை உடல்மொழி வெளிப்படுத்தியது.
''பல்வேறு தேசத்தை சார்ந்தவர்கள் சாப்பிடுற கூடத்தில் இந்த தொந்தரவு இருக்கத்தான் செய்யும்...பொறுத்துக் கொள்ளுங்கள்'' என்றேன்.
நீங்க எப்பவுமே இப்படிதான் பேசுவீங்களா?
எப்படி?
இல்ல...ஒரு மாதிரி தமிழ் மட்டுமே யூஸ் பண்ணி....இங்கிலீஷ் கலக்காம...அதை சொன்னேன்
எனக்கு 6 மொழிகள் பேசத்தெரியும்....ஆனால் கூடுமானவரை தமிழ் பேசும் போது ஆங்கிலமோ...ஆங்கிலம் பேசும் போது தமிழோ கலப்பதில்லை...அதில் எனக்கு உடன்பாடு இல்லை''
எழுதுவீங்களா...?
எதை எழுதுவீங்களான்னு கேக்குறீங்க?
''இல்ல....கவிதை...கதை...இந்த மாதிரி''
''இல்ல...நான் எழுதுறதில்ல...எனக்கு சாப்பிடத் தெரியுமே தவிர சமைக்கத் தெரியாது''
கலகலவென சிரித்தார்....''நல்ல டைமிங்''
''கவிதை, கதையில நீங்க பிரகாசிக்கிற மாதிரி நீங்க ஏன் பேச்சில் பிரகாசிக்கிறதில்ல?''
''இல்ல...எனக்கு ஸ்டேஜ் மேனேஜ்மெண்ட் பத்தாது...தெரியாதுன்னே சொல்லலாம்''
''உண்மை...எனது பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் இதில் வல்லவர்...ஆனால் அவரையே திணறடித்த சம்பவங்களும் உண்டு''
''வாங்க ரூமுக்கு போவோம்...இங்கே ஒரே டிஸ்டர்பன்ஸா இருக்கு...அங்கே போயி நிம்மதியா பேசலாம்''
நான்காவது மாடியில் கவிஞரது அறை.
''ம்ம்...இப்போ சொல்லுங்க....'' சுடிதாரின் கருமை நிறத்தைத் தாண்டி வெளியில் தெரிந்த இளஊதா நிற உள்ளாடைகள் என்னை தொந்தரவு செய்ய கவனத்தை திசைதிருப்ப கடினமாக இருந்தது.
''ஒரு தடவை பட்டிமன்றத்தில் என்னாச்சுன்னா ஒரு பேச்சாளர் அவரும் எனது பள்ளி ஆசிரியர் தான்...செந்தூரான்னு பேரு....ஒரு பாட்டை பாடிட்டு..அதற்கு நயம் சொல்ல ஆரம்பித்தார்...உதாரணம் எங்கேயிருந்து எடுத்தார்னா...கம்பராமாயணத்திலிருந்து''
''கம்பராமாயணமா...சினிமா பாட்டுக்கா?''
ஆமா...இதை கேளுங்க...சொல்ல ஆரம்பிச்சவரு...''நடுவர் அவர்களே! இப்படித்தான் கம்பராமாயணத்துல ஒரு சீன்'' அப்படின்னாரு..
உடனே முன்வரிசையில் இருந்து ஒருத்தன் '' அங்கேயுமா'' அப்படின்னான்.
செந்தூரன் தெறிச்சிட்டாரு...என்ன சொல்றதுன்னே தெரியாம முழிச்சாரு...உடனே நம்ம பேராசிரியர் இருக்காரே...பெரிய ஜித்தன் அவரு...நீங்க காட்சின்னே சொல்லலாமே...சீன் அப்படின்னா இங்க அர்த்தமே வேற'' அப்படின்னாரு...!
நான் சொல்ல வருவதை முன் கூட்டியே ஊகித்து சிரிப்பை கண்களில் இருந்து உதட்டிற்கு பரவ விட்டு உள்ளத்தின் அடிஆழத்தில் இருந்து சிரித்தார்.
இன்னொருவாட்டி என்ன நடந்ததுன்னா...நடுவர் பதவிக்கு நம்மாளு வித்தியாசமா விளக்கம் கொடுத்தாரு...இந்த பட்டிமன்றம் ஒரு சிந்தனைக்களம்...பேச்சாளர்கள் கருத்துவிதைகளை சிந்தனைக்களத்தில் தூவ... நான் அதை நடுகிறேன்....நடுவதால் நான் நடுவராகிறேன்...அப்பிடின்னாரு...
உடனே ஒருத்தன் எந்திரிச்சி '' மொத்தத்துல அறுக்க போறீங்க...அப்படிதானே'' அப்படின்னான்.
ஞானசம்பந்தமே தெறிச்சிட்டாரு...!
கவிஞர் உடல் குலுங்க குலுங்க சிரித்தார்...கண்களின் ஓரம் கண்ணீர்துளி படர சிரித்தார்.
''உங்ககிட்ட பேசினா நேரம் போறதே தெரியல''
''எனக்கு பேச்சு தான் மூலதனம்...வேற ஒண்ணும் தெரியாது''
நிஜமாவா...?
நான் ஏன் பொய் சொல்லப் போறேன்...அதுவும் உங்ககிட்ட''
ஏன் வேற யாரவதா இருந்தா பொய் சொல்லலாமா?
இல்ல...நான் அப்படி சொல்லல...கண்ணதாசன் சொல்வார் '' பொய் மட்டும் பேசாதே கேவலப்பட்டு போவாய்
உண்மை மட்டும் பேசாதே உதைபட்டு சாவாய்...உண்மையும் பொய்யும் கலந்து பேசு...வாழ்வில் உயர்த்தப்படுவாய்..
நான் இதை மிகத் தீவிரமாய் கடைபிடிக்கிறேன்.
''நல்ல பாலிசி''
''என் கவிதைகளைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?''
''எல்லாத்தியுமே படிச்சிருக்கேன் சில கவிதைகள் மட்டும்தான் எனக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கு..அது ஏன்னு தெரியல...''
உங்களுக்கு எந்த மாதிரி கவிதை பிடிக்கும்?
''தண்டவாளத்தில் தலைசாய்த்து படுத்திருக்கும் ஒற்றை ரோஜாப்பூ எனது காதல்...நீ நடந்து வருகிறாயா...இல்லை ரயிலில் வருகிறாயா'' அப்படின்னு பழனிபாரதி எழுதியிருப்பார்...அது மாதிரி கவிதைதான் பிடிக்கும்...சும்மா...உன்னைப் பார்த்தேன் என்னை மறந்தேன்...உன் தங்கையை பார்த்தேன் உன்னையே மறந்தேன்'' அப்படின்னு எழுதிட்டு அதை கவிதைன்னு சொன்னா எரிச்சல் தான் வரும்.''
''கவிதைன்னா படிச்சவுடனே காட்சியா விரியனும்...ஜெயமோகன் சொல்ற மாதிரி வாசகனோட அகமண எழுச்சிக்கு தூண்டலா இருக்கணும்''
ஜெயமோகன் ஒரு டேஞ்சரான ஆசாமி தெரியுமா?
''ஜெயமோகனோட சித்தாந்தத்தில் எனக்கு நிறைய கருத்து வேறுபாடும் முரண்பாடும் உண்டு...ஆனால் ஒரு எழுத்தாளனாக அவர் நிகழ்த்தியிருக்கும் சாதனை பாராட்டுக்குரியது''
''ஜெயமோகனுக்கு நான் அவ்வளவு கிரிடிட் தரமாட்டேன்...அவர் எங்கேயிருந்து திருடுறாருன்னு எனக்கு தெரியும்''
''அவர் எங்கேயிருந்து வேணும்னாலும் திருடட்டும்...எனக்கு என் மொழியில் இவ்வளவு எழுதிக் குவிக்கும் அவரை பாராட்டியே தீர வேண்டும்''
வேற என்னென்ன பிடிக்கும் உங்களுக்கு?
''வாசிக்க பிடிக்கும்...நெல்சன் மண்டேலா சொன்ன மாதிரி''
அவர் என்ன சொன்னாரு?
27 ஆண்டுகள் தனிமை சிறையில் என்னை உயிர்ப்புடன் வைத்திருந்தது புத்தகங்கள்...புத்தகங்கள் மட்டும் இருந்தால்...
இருந்தால்...?
''இன்னும் 27 ஆண்டுகள் தனிமை சிறையில் கழிப்பேன்'' அப்படின்னாரு...
ஓகோ...இப்போ என்ன படிச்சிக்கிட்டு இருக்கீங்க?
''ஓதி எறியப்படாத முட்டைகள்'' மீரான் மைதீன் எழுதியது, அப்பறம் வில் டியூரண்ட் எழுதிய தி ஸ்டோரி ஆஃப் பிலாசபி''
''இதையெல்லாம் நான் கேள்வி பட்டதே இல்லை''
பேசிக்கொண்டிருந்த போது அடிக்கடி அவர் சுடிதாரின் சால்வையை விலக்கி மீண்டும் சரி செய்த போது நான் நிலைதடுமாறுவதை கண்டு ரசித்தார். ஆனாலும் அதை அவர் நிறுத்தவில்லை.
''உங்கள் கவிதைகளில் வெளிப்படும் கோபத்தை நான் ரொம்ப ரசிப்பேன்...அதை நீங்கள் வெளிப்படுத்தும் மொழி ஆபாசம் என கருத வாய்ப்புள்ள போதிலும்''
''எனக்கு எழுதும் போது அப்படி தோணுறதே இல்லை...இன்னும் சொல்லணும்னா எழுத ஆரம்பிக்கிறது மட்டும்தான் என் வேலை...அதுக்கப்பறம் கவிதை தானே எழுதிக்கொள்ளும்''
சாரு நிவேதிதாவும் இதையே தான் சொல்வார்...''எழுத்தை எழுதிச் செல்லும் எழுத்து''
''ஐயய்யோ...அது இன்னொரு எக்சென்ட்ரிக் கேரக்டராச்சே''
யார்தான் எக்சென்ட்ரிக் இல்ல..சொல்லுங்க...கவிதை எழுதறபோது நீங்க கூட எக்சென்ட்ரிக் தானே....
இப்போது கவிஞர் தனது தொடைகளை வசதி கருதி விலக்க எனக்கு வியர்த்தது.
எனது வியர்வையின் அர்த்தத்தை உணர்ந்த கவிஞர் தான் இருந்த இருக்கையிலிருந்து எழுந்து என்னை நோக்கி நடந்து வந்தார்.
உடலின் அகமும் புறமும் இனம் புரியாத கலவரம் .
நெருங்கி வந்தவர் என் காதருகே கிசுகிசுத்தார் '' எனக்கொரு உதவி செய்ய முடியுமா?''
''இதை அங்கே உக்காந்தே கேக்கலாமே''
''உன் ரூமுக்கு போயிட்டு ஒரு இருபது நிமிடம் கழித்து வர முடியுமா?''
அடச்சீ...இவ்வளவுதானா...
''சரி...போயி இன்னொரு தடவை குளிச்சிட்டு வா''
இதென்ன கொடுமை...இப்போது தானே குளித்தேன்...இருப்பினும் சரி என்று பொதுவாக சொல்லி விட்டு ஏழாவது தளத்திலிருக்கும் எனது அறைக்கு சென்று குளித்தேன்.
மிகச்சரியாக இருபது நிமிடம் கழித்து அறைக்குள் நுழைந்தேன்.
(தொடரும்)








Wednesday, May 18, 2016

சென்னை - மதுரை: ஒரு கொடுங்கனவு பயணம் - 14-05-2016
மே 16 அன்று தேர்தல் என்பதால் நிர்வாகம் அதிகாரப்பூர்வமான விடுப்பை அறிவித்திருந்தது. சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் மனைவியையும் மகனையும் பார்க்க மதுரை செல்ல முடிவெடுத்தேன். தொடர்வண்டியில் டிக்கெட் முன்பதிவு செய்த என் பிரியசிநேகிதி சுஜாதா பெயரை டைப் செய்து பணம் கட்டுவதற்கு வங்கியின் வலைதளத்தை அணுகும் போது இருக்கை அனைத்தும் தீர்ந்து போய் காத்திருப்பு பட்டியலில் இரண்டால் இடமே கிடைத்தது. எப்படியும் கிடைத்து விடும் என்று நம்பிக்கை வேறு ஊட்டினாள். நம்பிக்கை மட்டும்தான் மிச்சம். ஆனால், ரயில்வே நிர்வாகம் மனம் இறங்கவில்லை. இறுதிவரை எனது பெயரை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருந்து பழி வாங்கி விட்டது. எனவே பேருந்தை தேர்ந்தெடுத்தேன். எனது மைத்துனன் முன்பதிவு செய்து தந்தான். ஆலந்தூர் பெரிய போஸ்ட் ஆபிஸருகே இரவு 10.15க்கு பேருந்து வரும் என்றும் நான் 10மணிக்கு அங்கே இருந்தால் போதும் என்றும் கூறினான்.
சென்னை வெப்பத்தால் தகித்துக் கொண்டிருந்தது. என் துணிகள் அடங்கிய பையையும் மடிக்கணிணி பையையும் எடுத்துக் கொண்டு போரூரிலிருந்து ஷேர் ஆட்டோவில் ஏறி கத்திப்பாரா ஜங்ஷன் வந்தடைந்தேன். அங்கேயிருந்து நேராக சென்று பாலம் ஏறி விமான நிலையம் செல்லும் சாலையில் சென்றால் ஒரு கிலோ மீட்டர் தூரத்திலேயே அந்த போஸ்ட் ஆஃபிஸ் உள்ளது. எனவே ஒரு ஆட்டோவை அணுகினேன். அவர் எனக்குச் சொந்தமான இரண்டு படுக்கை அறை கொண்ட குடியிருப்பை எழுதிக் கேட்டார். அடுத்து ஒருவரை அணுகினேன். அவரோ நான் அணிந்திருந்த சங்கிலி, மோதிரம், பேண்ட்,சட்டை மற்றும் உள்ளாடைகள் அனைத்தையும் கேட்டார். வீட்டின் மீதி வங்கிக்கடன் இருப்பதாலும் பொதுப்பேருந்தில் உள்ளாடை கூட இல்லாமல் பயணம் செய்ய தைரியம் இல்லாததாலும் ஜோதி தியேட்டரை நோக்கி சாலையின் குறுக்கே நடக்க ஆரம்பித்தேன். ஆலந்தூர் மெட்ரோ ஸ்டேசனைத் தாண்டி தபால் நிலையம் வந்தடைந்தேன். என்னைப் போன்றே தொடர்வண்டியில் டிக்கெட் கிடைக்காத அபாக்கியசாலிகள் குழுமியிருந்தனர். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் என ஒரே கூட்டம். நேரம் இரவு 9.30. அனைத்து ஆண்களின் ஆடைகளும் வியர்வையில் நனைந்திருக்க பெண்களின் ஆடைகள் வியர்வையின் தடமே இல்லாமல் புதிதாக இருந்தது. அதுவரை நான் அறிந்திராத வண்ணங்களில் பெண்கள் ஆடை அணிந்திருந்தனர். அவர்களை பேருந்து ஏற்றிவிட வந்த ஆண் நண்பர்கள் தங்களது பெண் தோழியருக்கு தண்ணீர் பாட்டில் வாங்குவதிலும் மேலும் அவர்களின் தேவையை பூர்த்தி செய்வதிலும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். தனியார் பேருந்துகள் ஒவ்வொன்றாக வரத்தொடங்கின. ஒரே கூக்குரல்கள், குழப்பங்கள்..கூச்சல்கள்...! சாலை ரோந்துப்பணியில் இருந்த போக்குவரத்து ஆய்வாளர் வந்து ஒழுங்குபடுத்த துவங்கினார். ஒரு பேருந்து ஓட்டுனர் பக்கவாட்டில் வண்டியை நுழைக்க முயற்சித்த போது அவரிடம் மிக கண்ணியமாகவும் அன்பாகவும் பண்பாகவும் ''ஏண்டா நாயே...சோறத்தான திங்கற...இல்ல வேறெதையாவது திங்கறயா...அறிவு வேணாம்...போடா முன்னாடி'' என்றார். அடுத்து விதியை மீறி ஒரு பேருந்து வேகமாக கடந்து செல்ல அந்த ஓட்டுனரின் தாயைப் புணரப் போவதாக ஆத்திரமாக ஓலமிட்டார்.  இந்த குழப்பதிற்கு மத்தியில் ஒரு ஆட்டோ ஓட்டுனர் நிதானமாக இரு பேருந்துகளுக்கு மத்தியில் பயணிகளை இறக்கி விட்டு பணம் பெற்று சாலையின் குறுக்கே பாய்ந்து மாயமானார். இதைக் கண்ட ஆய்வாளர் கோபத்தின் உச்சிக்கே சென்று அந்த ஓட்டுனரின் ஆசனவாயை புணர்ந்து அங்கு சுண்ணாம்பு தடவப்போவதாக சூளுரைத்தார். சுண்ணாம்பின் மகத்துவத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைக்க அவர் தவறியதால் எனக்கும் அது புரியவில்லை. எனது பேருந்து வரவில்லை. அந்த நடத்துனருக்கு தொலைபேசினேன். அவருடைய பதில் '' சார்...இன்னக்கி வெள்ளிக்கிழமை...ஐயர் இன்னும் வரலை...அவர் வந்ததுக்கு அப்புறம் பூஜை முடிந்த பின்னாடி தான் வண்டிய எடுப்போம்''. எப்போ சார் வருவாரு ஐயரு? - நான். அது தெரிஞ்சா நானே டைம் சொல்ல மாட்டேனா...வெயிட் பண்ணுங்க சார்'' என்று கோபத்தோடு இணைப்பை துண்டித்தார். அருகே இருந்த குல்பி ஐஸ் கடையில் வியாபாரம் படுவேகமாக நடந்து கொண்டிருந்தது. பெண்கள் அனைவரும் குச்சி ஐஸையும் ஆண்கள் அனைவரும் மண் பாண்டத்தில் இருக்கும் ஐஸையும் ஏன் தெரிவு செய்கிறார்கள் என்ற எனக்கு புரியவில்லை. ஆண்கள் சாப்பிடுவதைவிட பெண்கள் குச்சி குல்பி ஐஸ் சாப்பிடுவதை காண ஒருவித தனிக்கிளர்ச்சி ஏற்படுகிறது. என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இரவு மணி 11.45. பேருந்து வரவில்லை.
500க்கும் அதிகமான மக்கள் அந்த சிறிய இடத்தில் கூடியிருந்தது அந்த பிராந்தியத்தின் வெப்பநிலையை  மேலும் அதிகப்படுத்தியது. மணி சரியாக 12. பேருந்து வந்தது. குளிர்சாதன வசதியோடு இருந்த போதிலும் மிக மோசமாக பராமரிக்கப்பட்ட பேருந்து எங்கும் தூசியும் குப்பையும். அத்தனைக்கும் நடுவே எனக்கு முன்னிருக்கையில் ஒரு அழகிய பெண் அமர்ந்து அந்த ஒட்டுமொத்த சூழலையும் அழகாக்கினார். மெல்லிய நீண்ட விரல்கள், அணிந்திருந்த ஆடைக்கு ஏற்றவாறு இளரோஜா நிற வண்ணத்தில் நகச்சாயம், கையில் இருந்த கடிகாரத்தின் பட்டை கூட அதே வண்ணம். செருப்பின் வார் கூட அதே வண்ணம். உள்ளாடைக்கு மட்டும் கருப்பு வண்ணத்தை அவர் தெரிவு செய்ததற்கு அறிவியல் ரீதியான காரணங்கள் இருக்கக்கூடும். இருப்பினும் அந்த எரிச்சலூட்டும் சூழலை குளிர்வித்த பெருமை அவரையே சாரும். 12.45 மணிக்கு பெருங்களத்தூர் வந்து மேலும் சில பயணிகளை ஏற்றிக்கொண்டு மதுரையை நோக்கி வந்த பேருந்து மேலூருக்கு அருகே காவல்துறையினரால் நிறுத்தப்பட்டது. தேர்தல் சோதனை. மீண்டும் ஒத்தகடை அருகே சோதனைக்காக நிறுத்தப்பட்டது. ஒருவழியாக மதுரை வந்தடைந்து எனது துணிப்பையை மேலிருந்து எடுத்த போது குளிர்ச்சாதன வசதிக்காக அமைக்கப்பட்டிருந்த குழாயிலிருந்து தண்ணீர் வடிந்து எனது ஆடைகள் அனைத்தையும் நனைத்திருந்தது. வீட்டிற்கு சென்று குளித்தபின் எதை அணிவது என்ற குழப்பம் அதிகரிக்க, சென்னை - மதுரை பயணம் என்னும் கொடுங்கனவு நனவானது...!