Thursday, May 19, 2016

கலவியும் கவிதையும் (1): (பெரியதாக ஒரு சிறுகதை)

கலவியும் கவிதையும் (1): (பெரியதாக ஒரு சிறுகதை)
அன்று  ஃப்ரான்ஸ் தேசத்தின் தலைநகரான பாரீஸ் நகரத்திலிருந்து துபாய் வர சார்ல்-தே-கால் விமான நிலையம் வந்தடைந்தேன். அனைத்து பரிசோதனைகளையும் முடித்து விமானத்தில் ஏறி அமர்ந்த பின்னால் முதன்மை விமானி விமானத்தில் கோளாறு எனவும் எனவே விமானம் தாமதமாக புறப்படும் என்றும் அறிவித்தார். தாமதம் சற்றேறக்குறைய 6மணி நேரம். நான் துபாய் வந்தடைந்த போது சென்னை - துபாய் விமானம் என்னை விட்டு புறப்பட்டு சென்றிருந்தது. வழக்கம் போல் எமிரேட்ஸ் நிர்வாகம் அவர்களது ப்ரெசிடெண்ட் விடுதியில் தங்க வைத்தது. விடுதிக்கு அழைத்துச் செல்லும் வாகனத்திற்காக காத்திருந்த பொழுது தான் அவரை கவனித்தேன். அவரைக் காட்டிலும் அவரது எழுத்து நன்கு அறிமுகமான ஒன்று. ஒரு புத்தக அறிமுகவிழாவில் சந்தித்து அளவளாவிய அனுபவமும் உண்டு. மேலும் அங்கிருந்த நபர்களில் தமிழ் தெரிந்த நபர் அவர் ஒருவர் தான். நானே என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். சிலமணித்துளிகளில் நாங்கள் சந்தித்துக் கொண்ட அந்த விழாவை நினைவு கூர்ந்தார். ஒன்றாய் சென்று விடுதியில் தங்கினோம். 
அவர் எழுதிய புத்தகங்களின் பெயர்களை வரிசைப்படுத்திக் கொண்டே வந்தேன். வியப்பாக என்னை நோக்கி '' உங்களுக்கு இதெல்லாம் பிடிக்குமா? என்றார். என்னை பாதிக்கும்படி எழுதும் எந்த எழுத்தும் எனக்கு பிடிக்கும் என்றேன்.
''குளிச்சிட்டு டைனிங்க் ஹால் வாங்க பேசுவோம்''
''கண்டிப்பா...இப்படி ஒரு வாய்ப்பு இனி எப்போது எனக்கு கிடைக்கும்?''
உணவி விடுதியில் மிக கவனமாக தனக்குத் தேவையான உணவு வகைகளை கவிதைக்கு சொற்களை தெரிவு செய்யும் கவனத்துடன் தேர்ந்தெடுத்தார்.
''உங்களை நீங்கன்னு சொல்றதா...இல்ல நீன்னு சொல்றதா...பாக்குறதுக்கு சின்னப் பையனா தெரியுறீங்களே'' என்றார் புன்னகையுடன்.
''நான் உங்களை விட வயதில் சிறுவன் தான்...ஆனால் எனக்கு திருமணமாகி ஒரு மகன் உண்டு எனவே நான் பாலகன் அல்ல'' - என்றேன்.
உணவகம் எங்கும் சலசலப்பு...அதை அமைதியின்மை என்றோ அமைதி என்றோ வகைப்படுத்த இயலா சூழலாய் இருந்தது.
''ரொம்ப தொந்தரவா இருக்கும் போலருக்கே'' - ஒருவித நெருடலை உடல்மொழி வெளிப்படுத்தியது.
''பல்வேறு தேசத்தை சார்ந்தவர்கள் சாப்பிடுற கூடத்தில் இந்த தொந்தரவு இருக்கத்தான் செய்யும்...பொறுத்துக் கொள்ளுங்கள்'' என்றேன்.
நீங்க எப்பவுமே இப்படிதான் பேசுவீங்களா?
எப்படி?
இல்ல...ஒரு மாதிரி தமிழ் மட்டுமே யூஸ் பண்ணி....இங்கிலீஷ் கலக்காம...அதை சொன்னேன்
எனக்கு 6 மொழிகள் பேசத்தெரியும்....ஆனால் கூடுமானவரை தமிழ் பேசும் போது ஆங்கிலமோ...ஆங்கிலம் பேசும் போது தமிழோ கலப்பதில்லை...அதில் எனக்கு உடன்பாடு இல்லை''
எழுதுவீங்களா...?
எதை எழுதுவீங்களான்னு கேக்குறீங்க?
''இல்ல....கவிதை...கதை...இந்த மாதிரி''
''இல்ல...நான் எழுதுறதில்ல...எனக்கு சாப்பிடத் தெரியுமே தவிர சமைக்கத் தெரியாது''
கலகலவென சிரித்தார்....''நல்ல டைமிங்''
''கவிதை, கதையில நீங்க பிரகாசிக்கிற மாதிரி நீங்க ஏன் பேச்சில் பிரகாசிக்கிறதில்ல?''
''இல்ல...எனக்கு ஸ்டேஜ் மேனேஜ்மெண்ட் பத்தாது...தெரியாதுன்னே சொல்லலாம்''
''உண்மை...எனது பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் இதில் வல்லவர்...ஆனால் அவரையே திணறடித்த சம்பவங்களும் உண்டு''
''வாங்க ரூமுக்கு போவோம்...இங்கே ஒரே டிஸ்டர்பன்ஸா இருக்கு...அங்கே போயி நிம்மதியா பேசலாம்''
நான்காவது மாடியில் கவிஞரது அறை.
''ம்ம்...இப்போ சொல்லுங்க....'' சுடிதாரின் கருமை நிறத்தைத் தாண்டி வெளியில் தெரிந்த இளஊதா நிற உள்ளாடைகள் என்னை தொந்தரவு செய்ய கவனத்தை திசைதிருப்ப கடினமாக இருந்தது.
''ஒரு தடவை பட்டிமன்றத்தில் என்னாச்சுன்னா ஒரு பேச்சாளர் அவரும் எனது பள்ளி ஆசிரியர் தான்...செந்தூரான்னு பேரு....ஒரு பாட்டை பாடிட்டு..அதற்கு நயம் சொல்ல ஆரம்பித்தார்...உதாரணம் எங்கேயிருந்து எடுத்தார்னா...கம்பராமாயணத்திலிருந்து''
''கம்பராமாயணமா...சினிமா பாட்டுக்கா?''
ஆமா...இதை கேளுங்க...சொல்ல ஆரம்பிச்சவரு...''நடுவர் அவர்களே! இப்படித்தான் கம்பராமாயணத்துல ஒரு சீன்'' அப்படின்னாரு..
உடனே முன்வரிசையில் இருந்து ஒருத்தன் '' அங்கேயுமா'' அப்படின்னான்.
செந்தூரன் தெறிச்சிட்டாரு...என்ன சொல்றதுன்னே தெரியாம முழிச்சாரு...உடனே நம்ம பேராசிரியர் இருக்காரே...பெரிய ஜித்தன் அவரு...நீங்க காட்சின்னே சொல்லலாமே...சீன் அப்படின்னா இங்க அர்த்தமே வேற'' அப்படின்னாரு...!
நான் சொல்ல வருவதை முன் கூட்டியே ஊகித்து சிரிப்பை கண்களில் இருந்து உதட்டிற்கு பரவ விட்டு உள்ளத்தின் அடிஆழத்தில் இருந்து சிரித்தார்.
இன்னொருவாட்டி என்ன நடந்ததுன்னா...நடுவர் பதவிக்கு நம்மாளு வித்தியாசமா விளக்கம் கொடுத்தாரு...இந்த பட்டிமன்றம் ஒரு சிந்தனைக்களம்...பேச்சாளர்கள் கருத்துவிதைகளை சிந்தனைக்களத்தில் தூவ... நான் அதை நடுகிறேன்....நடுவதால் நான் நடுவராகிறேன்...அப்பிடின்னாரு...
உடனே ஒருத்தன் எந்திரிச்சி '' மொத்தத்துல அறுக்க போறீங்க...அப்படிதானே'' அப்படின்னான்.
ஞானசம்பந்தமே தெறிச்சிட்டாரு...!
கவிஞர் உடல் குலுங்க குலுங்க சிரித்தார்...கண்களின் ஓரம் கண்ணீர்துளி படர சிரித்தார்.
''உங்ககிட்ட பேசினா நேரம் போறதே தெரியல''
''எனக்கு பேச்சு தான் மூலதனம்...வேற ஒண்ணும் தெரியாது''
நிஜமாவா...?
நான் ஏன் பொய் சொல்லப் போறேன்...அதுவும் உங்ககிட்ட''
ஏன் வேற யாரவதா இருந்தா பொய் சொல்லலாமா?
இல்ல...நான் அப்படி சொல்லல...கண்ணதாசன் சொல்வார் '' பொய் மட்டும் பேசாதே கேவலப்பட்டு போவாய்
உண்மை மட்டும் பேசாதே உதைபட்டு சாவாய்...உண்மையும் பொய்யும் கலந்து பேசு...வாழ்வில் உயர்த்தப்படுவாய்..
நான் இதை மிகத் தீவிரமாய் கடைபிடிக்கிறேன்.
''நல்ல பாலிசி''
''என் கவிதைகளைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?''
''எல்லாத்தியுமே படிச்சிருக்கேன் சில கவிதைகள் மட்டும்தான் எனக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கு..அது ஏன்னு தெரியல...''
உங்களுக்கு எந்த மாதிரி கவிதை பிடிக்கும்?
''தண்டவாளத்தில் தலைசாய்த்து படுத்திருக்கும் ஒற்றை ரோஜாப்பூ எனது காதல்...நீ நடந்து வருகிறாயா...இல்லை ரயிலில் வருகிறாயா'' அப்படின்னு பழனிபாரதி எழுதியிருப்பார்...அது மாதிரி கவிதைதான் பிடிக்கும்...சும்மா...உன்னைப் பார்த்தேன் என்னை மறந்தேன்...உன் தங்கையை பார்த்தேன் உன்னையே மறந்தேன்'' அப்படின்னு எழுதிட்டு அதை கவிதைன்னு சொன்னா எரிச்சல் தான் வரும்.''
''கவிதைன்னா படிச்சவுடனே காட்சியா விரியனும்...ஜெயமோகன் சொல்ற மாதிரி வாசகனோட அகமண எழுச்சிக்கு தூண்டலா இருக்கணும்''
ஜெயமோகன் ஒரு டேஞ்சரான ஆசாமி தெரியுமா?
''ஜெயமோகனோட சித்தாந்தத்தில் எனக்கு நிறைய கருத்து வேறுபாடும் முரண்பாடும் உண்டு...ஆனால் ஒரு எழுத்தாளனாக அவர் நிகழ்த்தியிருக்கும் சாதனை பாராட்டுக்குரியது''
''ஜெயமோகனுக்கு நான் அவ்வளவு கிரிடிட் தரமாட்டேன்...அவர் எங்கேயிருந்து திருடுறாருன்னு எனக்கு தெரியும்''
''அவர் எங்கேயிருந்து வேணும்னாலும் திருடட்டும்...எனக்கு என் மொழியில் இவ்வளவு எழுதிக் குவிக்கும் அவரை பாராட்டியே தீர வேண்டும்''
வேற என்னென்ன பிடிக்கும் உங்களுக்கு?
''வாசிக்க பிடிக்கும்...நெல்சன் மண்டேலா சொன்ன மாதிரி''
அவர் என்ன சொன்னாரு?
27 ஆண்டுகள் தனிமை சிறையில் என்னை உயிர்ப்புடன் வைத்திருந்தது புத்தகங்கள்...புத்தகங்கள் மட்டும் இருந்தால்...
இருந்தால்...?
''இன்னும் 27 ஆண்டுகள் தனிமை சிறையில் கழிப்பேன்'' அப்படின்னாரு...
ஓகோ...இப்போ என்ன படிச்சிக்கிட்டு இருக்கீங்க?
''ஓதி எறியப்படாத முட்டைகள்'' மீரான் மைதீன் எழுதியது, அப்பறம் வில் டியூரண்ட் எழுதிய தி ஸ்டோரி ஆஃப் பிலாசபி''
''இதையெல்லாம் நான் கேள்வி பட்டதே இல்லை''
பேசிக்கொண்டிருந்த போது அடிக்கடி அவர் சுடிதாரின் சால்வையை விலக்கி மீண்டும் சரி செய்த போது நான் நிலைதடுமாறுவதை கண்டு ரசித்தார். ஆனாலும் அதை அவர் நிறுத்தவில்லை.
''உங்கள் கவிதைகளில் வெளிப்படும் கோபத்தை நான் ரொம்ப ரசிப்பேன்...அதை நீங்கள் வெளிப்படுத்தும் மொழி ஆபாசம் என கருத வாய்ப்புள்ள போதிலும்''
''எனக்கு எழுதும் போது அப்படி தோணுறதே இல்லை...இன்னும் சொல்லணும்னா எழுத ஆரம்பிக்கிறது மட்டும்தான் என் வேலை...அதுக்கப்பறம் கவிதை தானே எழுதிக்கொள்ளும்''
சாரு நிவேதிதாவும் இதையே தான் சொல்வார்...''எழுத்தை எழுதிச் செல்லும் எழுத்து''
''ஐயய்யோ...அது இன்னொரு எக்சென்ட்ரிக் கேரக்டராச்சே''
யார்தான் எக்சென்ட்ரிக் இல்ல..சொல்லுங்க...கவிதை எழுதறபோது நீங்க கூட எக்சென்ட்ரிக் தானே....
இப்போது கவிஞர் தனது தொடைகளை வசதி கருதி விலக்க எனக்கு வியர்த்தது.
எனது வியர்வையின் அர்த்தத்தை உணர்ந்த கவிஞர் தான் இருந்த இருக்கையிலிருந்து எழுந்து என்னை நோக்கி நடந்து வந்தார்.
உடலின் அகமும் புறமும் இனம் புரியாத கலவரம் .
நெருங்கி வந்தவர் என் காதருகே கிசுகிசுத்தார் '' எனக்கொரு உதவி செய்ய முடியுமா?''
''இதை அங்கே உக்காந்தே கேக்கலாமே''
''உன் ரூமுக்கு போயிட்டு ஒரு இருபது நிமிடம் கழித்து வர முடியுமா?''
அடச்சீ...இவ்வளவுதானா...
''சரி...போயி இன்னொரு தடவை குளிச்சிட்டு வா''
இதென்ன கொடுமை...இப்போது தானே குளித்தேன்...இருப்பினும் சரி என்று பொதுவாக சொல்லி விட்டு ஏழாவது தளத்திலிருக்கும் எனது அறைக்கு சென்று குளித்தேன்.
மிகச்சரியாக இருபது நிமிடம் கழித்து அறைக்குள் நுழைந்தேன்.
(தொடரும்)








No comments:

Post a Comment