Thursday, May 19, 2016

''கலவியும் கவிதையும்(3): (பெரியதாக ஒரு சிறுகதை)

''கலவியும் கவிதையும்(3): (பெரியதாக ஒரு சிறுகதை)
இப்போது நான் என்ன செய்ய வேண்டுமென கவிஞர் விரும்புகிறார் என்று ஊகிக்க அதிக நேரம் பிடிக்கவில்லை. மாறாக, என்னுள் இருந்த அனைத்து தடைகளும் இப்போது விடைபெற்றிருப்பதை நானே உணர்ந்தேன்.
''நீ என்ன பெர்ஃப்யூம் யூஸ் பண்ற?''
''இல்ல...நான் அப்படி எதுவும் பயன்படுத்துவதில்லை...காரணம் நான் இருவேளை குளிக்கும் பழக்கமுடையவன்''
''குளிக்கிறதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்?''
''''இப்போ இங்கே நடக்குறது எல்லாமே சம்பந்தத்தோடதான் நடக்குதா என்ன?...சரி...இப்போ நான் என்ன செய்யணும்?''
''நீ ஒண்ணும் செய்ய வேணாம்...நானே எல்லாத்தையும் செஞ்சுக்குறேன்...புரியுதா''
அனைத்தையுமே அவர்தான் செய்தார்.
சரியாக பதினோரு நிமிடம் கழித்து சுயம் அழிந்தது...காலம் மறைந்தது...பிரபஞ்சம் மறைந்தது...எரிந்து தீர்ந்து போன கருந்துளைக்குள் சங்கமமாகும் பெரு நட்சத்திரங்கள் போல அனைத்தும் கலந்து ஆற்றலும் பருப்பொருளும் ஒன்றாகி பிரிக்க இயலா அந்தக்கணம் கடந்து போன தருணத்தில் விழிப்பு ஏற்பட்டது...
''உங்களுக்கு என்ன பாட்டு பிடிக்கும்?''
எனக்கா....ம்ம்...நிறைய பாட்டு பிடிக்கும்...எதைன்னு சொல்றது?
ஏதோ ஒண்ணு...ரொம்ப பிடிச்சது....
பழசா...புதுசா?
''அது என்ன பழசு...புதுசுன்னுட்டு...பாட்டுல நல்ல பாட்டு...மோசமான பாட்டுன்னு தான் இருக்கு...நல்லது நிலைச்சு நிக்கும்...மோசமானது காணாமப் போயிடும்''
''வீட்ல கூட இப்படிதான் பேசுவியா...எல்லாத்துக்கும் ஒரு தத்துவ விளக்கம் கொடுத்துக்கிட்டு''
''அப்படின்னு தான் நினைக்கிறேன்''
''சரி சொல்றேன்... காதல் சிறகை காற்றினில் விரித்து வான வீதியில் பறக்கவா'' அந்தப் பாட்டு ரொம்ப பிடிக்கும்''
''சரி கொஞ்சம் பாடுங்க''
''ச்சீ...நான் பாடுனா நல்லா இருக்காது...எனக்கே பிடிக்காது''
''சும்மா பாடுங்க''
மெல்லிய குரலில் ஒரு புதுமணப்பெண் கணவனிடம் பேசும் தயக்கக் குரலில் பாடினார்
''காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்
கண்ணீர் கடலில் குளிக்கவா..''
நன்றாகத்தான் பாடினார்..துவக்கத்தில் இருந்த நடுக்கம் மறைந்து மெதுவாக சுருதியை கூட்டி மிக லாவகமாக குறில் நெடில் அறிந்து வார்த்தைகளுக்கு வேண்டிய உணர்ச்சியை அளவாக கொடுத்து எனது மார்பில் ஆட்காட்டி விரலால் கோலமிட்டபடியே பாடினார்.
''பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது..
அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேசமறந்து சிலையாய் இருந்தால்....
பேசமறந்து சிலையாய் இருந்தால்...
அதுதான் தெய்வத்தின் சந்நிதி.....
அதுதான் காதலின் சந்நிதி'
கன்ணிலிருந்து கண்ணீர் திவலைகள் என் மார்பில் உருண்டோடின. அதிர்ந்து போய் ''என்னாச்சு'' என்றேன்.
''இல்ல...ஒண்ணுமில்ல...நல்லா இருந்துச்சா?''
''அற்புதம்...இதைவிட சிறப்பாக வேறுயாரும் பாட முடியாது என்பது எனது அனுமானம்.''
''ச்சீ...பொய் சொல்ற''
''இல்ல...நான் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல''
''இந்த பாட்டு எனக்கும் பிடிக்கும். இந்த பாடல் சந்தங்களுக்கு இணையான வேறு வார்த்தைகளைப் போட்டு நண்பர்கள் மத்தியில் நான் பாடுவது வழக்கம்''
''அப்படியா...நீ பாடுவியா...எங்கே பாடு பார்க்கலாம்...ச்சீ...கேட்கலாம்''
அதே ராகத்தில் எனது வார்த்தைகளை இட்டு நான் பாட ஆரம்பித்தேன்.
''ங்கொய்யா டவுசரை வெள்ளாவி வைத்து நீலம் போட்டு நான் துவைக்கவா...உனக்கும் வெளுக்க துணிமணி இருந்தால் அதையும் கொஞ்சம் எடுத்துவா...ஆஆஆ''
வெடித்து சிரித்தார்...அடக்க இயலாத சிரிப்பு. அறையே அதிர்ந்து போகும் அளவிற்கு ஆடையே இல்லாத அடிவயிற்றை பிடித்துக்கொண்டு கண்ணீர் வர சிரித்தார். கண்கள் சிரித்தன, மார்பு சிரித்தது, வயிறு சிரித்தது....மெல்ல எழுந்து குளியலறைக்கு சென்றார்...சிரித்துக் கொண்டே!
அறைக்குள் குளிக்கும் சத்தம் கேட்டது...நான் கண் அயர்ந்தேன்.
பத்து நிமிடம் கழித்து தலையில் வெள்ளைத்துண்டை மட்டும் கட்டிக்கொண்டு கண்ணாடி முன் நின்று தன்னைத்தானே ரசித்தார்.
வலதுகையை இடுப்பில் வைத்துக்கொண்டு, இடது கையை மாற்றி இடுப்பில் வைத்துக் கொண்டு, பின்பு நாக்கைக் கொண்டு வலது கன்னத்தை உப்ப வைத்தார்...அதே போன்று இடது கன்னத்திற்கு நாக்கை மாற்றி துருத்தினார்...தன்னைத்தானே பகடி செய்து கொண்டு மெல்ல வலது கையின் நடுவிரலை நெற்றி, மூக்கு, உதடு, நாடி, கழுத்து, மார்பு, வயிறு, அடிவயிறு என படர விட்டார்.
துண்டு தலைமுடியிலிருந்து நழுவி சரிய, சரிந்த துண்டு இடது பிருஷ்டபாகத்தை லேசாக மறைத்தது. வலதுகை கொண்டு அதை பிடித்த ஒரு கணம் கிரேக்க சிற்பமான வீனஸ் கல்லிபிகஸை நினைவூட்டினார். அழகு பலவகைப்படும். ஆனால் அழகும் அறிவும் இணையும் அந்த புள்ளி முக்கியமானாது. வெகுசிலரே அந்த அழகை பெறுகின்றனர். நான் முதன்முதலாக அந்த அழகை  சந்தித்தேன்.
(தொடரும்)






No comments:

Post a Comment